திருநிறை ஆற்றல்
(223
உடலக விழிப்பு அறிவக விழிப்பாகவோ, உள்ளக விழிப்பாகவோ அமைய வேண்டுமென்பதில்லை. ஆனால் உள்ளக விழிப்பு அறிவக விழிப்பாகவும் உடலக விழிப்பாகவும் அமைதல் உறுதி. விழிப்பில் உடலையும் அறிவையும் இயக்கும் உள்ளகம். அதை எப்போதும் இயக்குமாதலால், உடல்நலமும் அறிவுநலமும் உள்ளக நலம், அஃதாவது அக நலத்தின் விளைவாகவே கிட்டுகின்றன.
புலர்காலையில், கதிரவன் எழும் முன்னே, காரிருள் வானில், விண்மீன்களின் கண்ணொளிக் காவல் கழியு முன்பே, விண்மீன்களின் தோழனாக விழித்தெழுதல் நன்று. விண்மீனில் ஒரு விண்மீனைப்போல, அரையிருளிடையே உன் உள்ளொளிச் சிந்தனை எழுப்பி அதனுடன் உன் செயற்களப் பாராட்டத்தைத் தொடங்குவாயாக. இவ்வழியில் இன்னும் உலகில் பெரும்பகுதி இருளில் கனவில் அயர்ந்துறங்கும்போதே, நீ விழிப்புற்று, மெய்ம்மையின் விடியல் ஒளியைக் காண ஆயத்தமாய் விடுகின்றாய். புற உலகின் விடியற்போதே உன் அக உலகின் விடியற்போதை வருவிக்கப் பெருந்தூண்டுதலாயிருக்கும். ஏனெனில் அப்புற விடியற் போதுகளில் நீ சிந்தனை மூலம் படிப்படியாகப் பெறும் அமைதி, உன் அக விடுதலையின் அமைந்த பேரொளிக்கு வழி வகுக்கும்.
பெரியார் உற்ற பீடுறும் முகடெலாம் ஒருபெருங் குதியுடன் உற்றன ஆகா! சிறியார் துயில்வரு சிற்றிராப் பொழுதினில் சிறுகப் பயில் சிறு நடை விளை வறிதி.
விடியற்போதிலேதான் இயேசு தனிமையில் குன்றேறி நின்று இயற்கையின் அரையிருளில் அதன் உள்ளத்துடன் உறவாடப் பயின்றார். புத்தர்பிரான் விடிய ஒரு கடிகை முன்பே எழுந்து ஆழ்நினைவமைதியில் திளைத்து வந்தார். இத்தகு செய்திகள் தற்செயலான நிகழ்ச்சிகள் அல்ல. அவர்கள் அரிய உள்ளக நிலைகளின் பண்புக்குரிய பயிற்சிப் பழக்கங்களே இவை, புத்தர் இப்பழக்கத்தைத் தம் சீடர்களுக்கும் வலியுறுத்தி வந்தார்.
விடியற்காலையில் சிந்தனைக்கு ஒருமணி நேரம் தர உனக்கு எக்காரணத்தாலேனும் வாய்ப்பில்லாமல் போனால், அதற்கு