பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இருதலை மணியம் தன்முனைப்பும் வாய்மையும்

மனித உள்ளம் இரண்டு அரசுகளின் போர்க்களம். மனிதனை ஆட்சிசெய்ய அவ்விரண்டும் அக்களத்தில் நின்று ஓயாது போரிடுகின்றன. அவ் இரு அரசுகளுள் ஒன்று தன் முனைப்பு. அதனை நாம் பொருளுலகின் சார்பான, “உலகரசு” என்று கூறலாம். மற்றொன்று வாய்மை அல்லது கடவுளின் சார்பான “ஒளியரசு”. உலகரசு ‘உலகக் கோமான்’ ஆகிய தன்முனைப்பின் ஆட்சியிலுள்ளது. மற்றது தந்தையாகிய எம் இறைவன் ஆட்சியிலுள்ளது. தன் முனைப்பின் ஆட்சியே இறையாட்சி யமைதிக்கு எதிராக உணர்ச்சி பேதங்கள், தற்பெருமை, பேரவா, செருக்கு, தன்னடம் ஆகிய இருளாற்றல் களை இயக்குகிறது. வாய்மையோ இவற்றுக்கெதிராக மெல்லமைதி, பொறுதி, தூய்மை, தன்மறுப்பு, பணி விணக்கம், அன்பு ஆகிய எளிமைவாய்ந்த, நொய்ம்மையும் நெகிழ்வும் தொய்வும் உடைய ஒளிபடர்ந்தொளிர வல்ல பண் பண்புகளை இயக்குகிறது.

ஒவ்வோர் உள்ளத்திலும் இத்தகைய போராட்டம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. போராட்டத்தில் ஒவ்வொரு படைஞனும் இரண்டு எதிரெதிர் தரப்புகளில் யாதாமொரு தரப்பில் சேரவேண்டியது இன்றியமையாதது. அதுபோலவே ஒவ்வோர் இதயமும் தன்முனைப்பு, வாய்மை ஆகிய இருபடை யாட்சிகளுக்குள் ஒரு படையாட்சியின் கீழ்ச்சேர்ந்து அணியமர்வு பெற வேண்டும். இரண்டுக்கும் இடைப்பட்ட இடைவழித் தரப்பு எதுவும் இருக்கமுடியாது. "தன்முனைப்பு என்ற ஒன்று உண்டு. வாய்மை என ஒன்று உண்டு. தன் முனைப்பு இருக்குமிடத்தில் வாய்மை இடம் பெறாது. வாய்மை இருக்குமிடத்தில் தன்முனைப்பு

டம்பெற மாட்டாது” என்றார் வாய்மையின்