திருநிறை ஆற்றல்
தன்னை
241
வென்றபின்பே பொருள்களின் தகுதி களையும் அவற்றின் மெய்மையான தராதரத் தொடர் புகளையும் நீ காண்பாய். உணர்ச்சி எழுச்சிகள், தப் பெண்ணங்கள், விருப்பு வெறுப்புக்கள் உடையவர் இவற்றை உணர மாட்டார்கள். ஏனெனில் இவ்வுணர்ச்சிகளின் வழியே எல்லாப் பொருள்களின் காட்சியறிவும் அவர்கள் அகக்கண்களில் மாறுபட்டுத் தோன்றும். அவர்கள் கண்ணிருந்தும் காணாதவராவர். காதிருந்தும் கேளாதவரேயாவார். அதுமட்டுமன்று. கண்ணில்லாதவர் நிலையைவிட அவர்கள் நிலை பொல்லாதது. ஏனெனில் கண்ணில்லாதவர் காண மாட்டார், அவ்வளவே! காண்பதாக எண்ணிப் பிழையைப் பிழையாக்கிக் கொள்ளமாட்டார். புறக்குருடர், புறச்செவிடர் நிலையைவிட இந்த அகக் குருடர், அகச் செவிடர் நிலை பலவகையிலும் ஆரிடர் தரத்தக்கது.
ஏ
அமைதியின் தேசத்திலும் அதனால் ஏற்படும் பாசத் திலும் ஈடுபடுபவர் ஏசலிலும் பூசலிலும் எங்ஙனம் கைகலப்பர்? அவ்வலைகளில் அசையாது அவர்கள் வாழ்வில் இயங்குவர். "அலைகளை விடக் கடல் பெரிது; முகில்கள் சென்ற பின் கதிரவன் ஒளி நின்றியங்கும்; தேய்ந்த பிறை மீண்டும் வளர்ந்து நிறைவுறும்” என்ற மெய்ம்மைகளை அறியும் அவர்கள் அலைகள். முகில் நிழல்கள், பிறைத் தேய்வுகள் ஆகியவற்றுக்காகக் கலக்க முறமாட்டார்கள்.
ஐம்புலவேட்கையாகிய வலங்கொண்ட, ஆனால் நிலையில்லாத, போலி இன்பங்களின் பற்றுடையவர் வாழ்க்கை யார்வத்தின் பயனாகவே வாழ்வை இழப்பர்.தசைப் பற்றாலே துன்பப்புயலில் தடுமாறுவர்; இன்ப நிலவில் தடம் மாறுவர். துன்பவிதை விதைத்து, துயர அறுவடை அறுத்துச் சோகிப்பர். அவர்கள் அடையத்தகும் ஆறுதல் ஒன்றே ஒன்றுதான்; துன்பமிகுதியால் அவர்கள் புறஞ் செல்லும் வழியில் எய்ப்புற்று, அது கடந்த உயர் பொருள் ஆகிய கடவுள் கருத்து என்ற சேமவைப்பில் கருத்துச் செலுத்தக்கூடும். புறங்கடந்த உயர்சிந்தனை அவர்களைப் படிப்படியாக ஈர்த்து அகத்திசையில் அவர்கள் கருத்தைத் திருப்பக்கூடும். அனுபவ வாயிலாக இப்பரி பக்குவநிலை அடைந்தவர்களே வாய்மை வழியில் காலடி