(268) ||
அப்பாத்துரையம் – 43
வில்லை, உயர்த்த முயலவுமில்லை! ஊனுண்பவர் இழிந்தவர், அவர்கள் ஊனுணவு கைவிட்டாலும் இழிந்தவரே என்று இத்தகையவர்கள் கருதுவதால், இயற்கையிலேயே ஊனுணவை விலக்க விரும்புபவர்கள், விலக்கமுயலுபவர்கள்கூட ஊனுண்ணாதவர்கள் வெறுப்புச் செயலின் எதிர் விளை வாக, ஊனுண்ணாமை மீதும் வெறுப்புக் கொள்ள இட மேற்பட்டுவிடுகிறது.
தீயப் பண்புகள் கண்டால், அவற்றை வெறுக்கும் உரிமை எல்லாருக்கும் உண்டு. ஆனால் பண்பை வெறுக்கும்போது அப்பண்புடையோரையு யோரையும் வெறுப்பது, அம்மக்களை நிலையாக அப்பண்புக்குரியவராக்கி விடுகின்றது. குடிகாரன் குடிகாரனாகப் பிறப்பதில்லை. குடிகார இனம் என்று ஓர் இனம் கிடையாது. அவன் என்றும் குடிகாரனாக இருக்க வேண்டும் என்றும் இல்லை. குடி வெறுப்பவர் அவனிடம் அன்புகாட்டிக் குடியை மட்டும் வெறுப்பதாக அவன் கண்டால், அவன் திருந்த இடம் உண்டு. இதனால்தான் பழிகாரரை வெறுக்காது பழியை எதிர்க்கும் பண்பும், பகைமையில்லாது பண்பைப் பண்பால் பண்புடன் எதிர்க்கும் பண்பும் வளர்வது உலக நலத்துக்கு இன்றி யமையாதது ஆகிறது.
மேலும் இயற்கையளாவிய தெய்விக அன்பு உயர்நீதி மட்டுமல்ல, அதுவே உண்மையான நீதி. ஏனெனில் நல்லார், தீயார் ஆகிய இருதிறத்தாரும் தற்காலிகத் தீமைகளில் கிடந்துழன்று திருந்துவதற்கும் உரியவரே. தீமையின் தொடர்பிலிருந்து நிலையாக விடுதலைபெறாத ஒருவருக்கு, கிட்டத்தட்ட அதே நிலையிலுள்ள இன்னொருவரைக் கண்டித்தொறுப்பதற்கு என்ன உரிமை? நேர்மாறாக அவரிடம் அன்பு செலுத்தும் கடமை மற்றவருக்கு உண்டு. ஏனெனில் அந்த அன்பு ஒன்றே பண்பை மாற்றும்; சூழலைத் திருத்தி அமைக்கும்.
பெரும்பாலும் தம் கருத்துக்களுக்கு ஒத்துவராத வர்களை மனிதர் தத்தம் கோணத்திற்கேற்ப, ஒரு சாராரைத் தீவிரவாதி, வெறியர், பிடிவாதக்காரர் என்றும், இன்னொரு சாராரைப் பிற்போக்காளர், மிதவாதிகள், பசப்பர், போலிகள் என்றும் அவப்பெயரிட்டு அழைக்கவும், தூற்ற வும், ஒறுக்கவும் துணிகின்றனர். இக்கூற்றுக்கள் யாவும் தத்தம்