பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வுக் கட்டுரைகள்

7

நிலை

வழக்கு மன்றத்தில் உறுதிமொழி கூறல், அரசியல் மன்றத்திற்கான மொழிதரல், செய்த குற்றத்திற்குத் தண்டனை பறுதல் ஆகிய பொறுப்புக்கள் இப்பருவத்தில் முழுவதும் அவர்களிடம் வருவதில்லையாயினும், இவற்றுக்கான பயிற்சிகள் தொடங்கிவிடுகின்றன. இளமைப் போதைப் போல இப்போது அவர்கள் உடலும் உளமும் திருப்பியபடியெல்லாம் திரும்பிக் கொள்ளும் நிலையில்லை. முதுமைப் போதைப்போலத் திரும்ப முடியாத நிலையிலும் இல்லை. அவர்கள் இவ்விரண்டையும் விட நன்மை தீமைச் சிறப்புடையது.ஏனெனில், இப் பருவத்தில் அவர்கள் எப்படித் திரும்புகிறார்களோ, அப்படியே வாழ்நாள் முழுவதிலும் அவர்கள் போக்குத் திரும்பியிருக்கும். திருப்புபவர் இன்றித் திரும்பும் இப்பருவத்தில், உருவாக்குபவர் இன்றி உருவாகும் இப்பருவத்தில் தான் திரும்புவதற்கான உதவியுரையும், உருவாகுவதற்கான தூண்டுதலுரையும் மிகுதியாகத் தேவை. எனவே, இப்பகுதிக்கான அறிவுரைகளை, 'வாழ்க்கையின் வாயிற்படி' ‘இளைஞருக்கான அறிவுரைகள்' என்ற கட்டுரைகளில் தருகிறோம்.

இந்தப் படிகளிலேயே குருத்துவிட்டு வாழ்க்கையை முற்றிலும் ஆக்கவோ, அழிக்கவோ செய்யத்தக்க வாழ்க்கை நிகழ்ச்சி காதலாகும். வாழ்க்கைப் போக்கையே மாற்றியமைக்கும் இவ்வுணர்ச்சி, இளமைக்கு முன்னும் இன்னதென்று உணரப் படாதது, இளமைக்குப் பின்னும் அதன் தன்மை தோன்றுவ தில்லை; பெற்றோர் இத்துறையில் தெள்ளத் தெளிய உதவு முடியாது; ஆசிரியர் இத்திறத்தில் மிகுதியாக வழிகாட்ட முடியாது. முதியவர் இவ்வுணர்ச்சியை அறியமாட்டார்கள். அறியினும் அதனை மறந்துவிட்டிருப்பது உறுதி. எதிர்பாராது வந்து கவிதைபோல எழுதிச்சியும் பயனும் ஈந்து வாழ்க்கையுடன் வாழ்க்கையாய் ஒன்றுபட்டுப் பிரித்தறியப்படாத இவ்வுணர்ச்சி வகையில் ஒருவருக்கு வழிகாட்டியாயிருப்பது அவ்வுணர்ச்சியும் இயற்கையுமல்லாது வேறில்லை. ஆயினும் வாழ்க்கைக் களம் காணாத இளைஞர்கள் அதன் தன்மை, அதன் இடைஞ்சல்கள், அதில் நேரும் பிழைகள் ஆகியவற்றை அறிவதும்; அதன் தற்காலிகத் தோற்ற மயக்கங்களில் சிக்கிவிடாமல் அதன் நிலையான வாழ்க்கைப் பயனைச் சிக்கெனப் பிடிக்க உதவுவதும்