நல்வாழ்வுக் கட்டுரைகள்
19
தெளிவாகும். வாழ்க்கைக்கு இன்றியமையாப் பொருள்களல்லாத இவை இன்றியமையாப் பொருள்களானதும், இவற்றை விளைவிக்கும் நாட்டினர் இவற்றை வாணிக ஆதாயச் சரக்குகளாக்கிக் காப்பு வரியிட்டனர். பிறநாட்டு அரசியலாரும் இதனைப் பின்பற்றி ஆதாயம் பெற முனைந்தனர். இங்ஙனம் பிற பொருள்கள் எல்லாற்றிலும் மக்கள் தேவைக்கு உதவி செய்து நல்வாழ்வுக்கு அடிகோல உழைக்கும் அரசியல், இவ்வொரு துறையில் மட்டும் எப்படியோ மக்கள் நல்வாழ்க்கையைக் கெடுத்துத் தம் ஆதாயத்தைப் பெருக்க முனைந்துவிட்டது.
அறிவுத் துறையாளரையும் இன்றைய 'உழையா இன்ப வகுப்பினர்' ஆட்டிப் படைக்கின்றனராதலால், இத் தீய வழக்கங்களுக்கு ஆதரவுரை தரப்பலர் முன்வந்து விடுகின்றனர். பழங்களைப் போலவே பழச்சாறும் இயற்கை தந்த வளம் என்றும், மனிதர் பயன்படுத்தவே அவையும் ஆண்டவனால் படைக்கப் பட்டன வென்றும், அவற்றை மட்டாக உண்டால் கேடில்லை என்றும் இத்தகையோர் கூறுகின்றனர்! இந்த நெறியே ஆராய்வதனாலும், இவை விளையும் நாடுகளுக்கே இவை பயன்பட்டிருக்க வேண்டும்; ஆனால், இன்று இவை ஒரு சில நாடுகளில் மட்டும் பயிராகிப் பிற பல நாடுகளுக்கும் விற்கப்படுகின்றன. பிரிட்டனில் வை பெருக்கமாக விளைபவையல்ல. விளையும் நாடுகளிலும் இவை வணிக நோக்கத்துடனேயே விளைவிக்ப்படுவதால், பிற நற்பயிர்களை அழித்தே பெருகுகின்றன.
வெறிக்குடிகளைக்கண்டிப்பவரும் சிறுவெறிக்குடிகளையும், புகையிலையையும் கண்டிப்பதில்லை. எனவே, இவை வெறிக் குடிகளை விடப் பரந்து வழங்கிக் காற்றைப் போல, நீரைப் போல் இன்றியமையாத பழக்கங்களாகி வருகின்றன. பெருந் மைகளளவு இச்சி ச்சிறு தீய பழக்கங்கள் தனிமனிதனைக் கெடுப்பதில்லை என்பது உண்மையே. ஆனால், தடுப்பாரின்றி, ஊக்குவார் பலராக வளர்வதனால், இவை மக்கள் இனப்பண்பின் வேர் முதலையே நச்சுப்படுத்தி, நாளடைவில் மனித நாகரிகத்தையே அழிக்கக்கூடியவை ஆகின்றன. இதுவே நாகரிகமாயின் தற்கொலையும் ஒரு நாகரிகப் பண்பு எனக் கூறுதல் சாலும். இவற்றை ஒதுக்கி வாழ்பவர், இவற்றை ஒதுக்கத்