பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. இளைஞருக்கான அறிவுரைகள்

வாழ்க்கையின் வாயிற்படி என்று நாம் குறித்த காலத்திற்கும் இளமைக்கும் மிக தொலைவில்லை. அது போலவே இளமைக்கும், வருகிற பிரிவில் கூறவிருக்கும் காதலுக்குரிய இளமைக்கும் நெடுந்தொலை கிடையாது. உண்மையில் அவையாவும் இளமையின் முத்திறக் கூறுகளே, வாழ்க்கையின் சிறுமைப் போதில் எத்தகைய பொறுப்பும் இல்லாததனால், ஒழுக்க நூலார் அது பற்றி மிகுதி கூறவேண்டுவதில்லை. பிற்பகுதியிலோ வாழ்க்கை ஒரு நிலைப்பட்டு விடுகிறது; சிக்கல்கள் அதில் மிகுதியாயிருப்பதில்லை. சிக்கல்கள் ஒரு சில இருப்பவையும் தனிமனிதரைப் பற்றியவையல்ல; குடும்பம், ஊர், நாடு, உலகம் ஆகியவற்றைப் பற்றியவை. இவை இரண்டினுக்கும் இடைப்பட்ட

ளமைக்காலமே வாழ்க்கை முழுமைக்கும் தனி மனிதன் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ள உதவும் காலம் ஆகும். முன் அனுபவமின்மை, வகை துறையின்மை, புது அனுபவ மயக்கம் ஆகிய மூன்று இடைஞ்சல்களால் இப்பருவம் இடர்ப்படுகின்றது. முதல் இடைஞ்சல் பற்றியே வாழ்க்கையின் வாயிற்படி என்ற முன் பிரிவில் சில விளக்கங்கள் தரப்பட்டன. மூன்றாவது இடைஞ்சல் பற்றி வரும் பிரிவிற் கூறுவோம். இப்பிரிவில் வாழ்க்கைக்கு இன்றியமையா வகைதுறையாகிய பொருள் செயல்வகை பற்றிக் கூறுவோம்.

வாழ்க்கையில் இன்பமும் அறமும் அஃதாவது குடும்ப வாழ்வும் சமூகத் தொண்டும் பொருளையே அடிப்படையாகக் கொண்டவை. பொருளே ஒருவருக்குத் தன்மதிப்பும் சமூகத்தில் இடமும் தரவல்லது. பொருளில்லாமலோ, பொருள் செயல் வகையுணராமலோ ஒருவன் மற்ற இரு கூறுகளிலும் எவ்வளவு திறமுடையவனாயினும், உலகில் அவன் ஒளிபெற மாட்டான். வடுவிலா வையத்து மன்னிய மூன்றில், நடவண தெய்த