பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 --

அப்பாத்துரையம் - 43

உயர் குறிக்கோளில் ஈடுபட்டு பல இடங்களில் அவர்கள் சிறப்புகளை பெற்றும், பெறாதும் உள்ள இளைஞர்கள், உலகின் இயல்பறியாது வாழ்க்கையில் குதித்து, அதன்பின் தம் தொல்லைகளுக்கு உலகைக் குறைகூறத் தொடங்கிவிடு கின்றனர். உலகம் பெரிதும் குறைபாடு உடையதே; ஆனால், தனி மனிதன் தன்னை உலகுக்குத்தக்கபடி திருத்திக்கொள்ள முடியாதபோது, உலகம் எப்படித் தனி மனிதனுக்குக்காக, அதுவும் பலருள் ஒருவனுக்காக, தன்னை திருத்திக் கொள்ள முடியும்?

இவை மட்டுமன்று; பொருள் தேடுவதனால் ஒருவன் தற்பயிற்சியும், தற்சார்பும், தற்பண்பும் பெறுகிறான். பொது நலத்தொண்டு, உயர் குறிக்கோள் ஆகியவை அவன் கையில் ஒரு படையாக உதவுகிறதென்றால், அவன் தற்சார்பும் தற்பயிற்சியும் அப்படைக்கலத்தைத் தாங்கும் கையாகவும் கைத்திறமாகவும் பயன் அளிக்கின்றன. இத் தற்சார்பும் தற்பயிற்சியும் இல்லையானால், அவன் உயர் குறிக்கோள் கைப்பயிற்சியும் கையும் அற்றவனிடமுள்ள வாள்போல் பயனற்றதாகவும் வைத்திருப்பவனுக்கு மனக்கொதிப்பையும் ஏமாற்றத்தையும் பலசமயம் கேட்டையும் உண்டுபண்ணுவதாகவும் முடியும்.

உலகில் பெரும்பாலார் தன்னல வாழ்வுடையவர் மட்டுமல்ல. அத்தன்னலவாழ்விலும் வெற்றி பெறாதவர்கள், அஃதாவது வறுமையில் வாடுபவர்கள். வறுமையில் வாடும் கலைஞர்கள், அறிஞர்கள் தம் வறுமைக்குத் தாம் பொறுப் பாளிகள் அல்லவென்று நினைப்பதுபோலவே, அவர்களும் கருதுகிறார்கள். அவர்கள் மனபான்மையுடன் ஒத்துப் பார்த்தால் அது தவறுமன்று. ஏனெனில் பெரியார் தம் நலன் காணாது பிறர் நலத்திற்கு உழைக்கக்கூடும் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். அறியவும் முடியாது; ஒருவேளை அறிந்தாலும், தோல்வியில் வாடும் அவர்கள் அதைப் பற்றிச் சிந்திக்கக்கூட நேரமும் இடமும் இராது. இது பற்றி அவர்கள் எண்ணினாலும், “அறிவும் கலையும் உடைய இவர்களே வாழ்க்கைக்கு வகை காண முடியவில்லை யானால், நாம் எம்மட்டு? நாம் என்ன செய்யக்கூடும்?" என்று தான் அவர்கள் கூறிக்கொள்வர். வாழ்க்கையில் வெற்றிபெற்ற தன்னலக்காரராகிய செல்வரோ