நல்வாழ்வுக் கட்டுரைகள்
39
உடனுக்குடன் தெரிவதுபோல், பொருளகமுறி கொடுப்பவருக்குத் தெரியமுடியாது. பொருளகமுறியால் கணக்கு வைத்துக் காள்வதும். பணப் பாதுகாப்பும் எளிது என்று அதன் சார்பில் கூறப்படலாம். இது பெருந்தொழில் உடையவர்க்கு மட்டுமே பொருந்தும். மதிப்புக்காகப் பொருளகக் கணக்கும் பொருளக முறியும் மிகுதி பயன்படுத்துதல், கடனைப் போன்ற தீங்குடையதே. ஏனெனில் காசாகச் செலவு செய்யத் தயங்குமிடத்தில் கூட மனிதர் பொருள் முறியைப் பயன்படுத்தல் கூடும். பாதுகாப்பு வகையிலோ வெனில், பணம் திருடு போவதைவிட, பொருளக முறியில் கள்ளக் கையொப்பம் மிடல், கையெழுத்திட்ட வெற்றுமுறி திருடு போதல் ஆகியவற்றால் விளையும் கேடுகள், இன்னும் மிகுதி என்று கூறவேண்டுவதில்லை.
பெரிய நிலையம், தன் பெருந்தொழில்களில் வரவு செலவு வைத்துக் கொள்வதுபோலச் சிலர் தம் தனிப்பட்ட செலவுக்கும் கணக்கு வைத்துக் கொள்வதுண்டு. தம் வரவு செலவுகளின் போக்கை உணர்ந்து தடுக்கவும் திருத்தவும் இத்தகைய குறிப்புப் பயன்படும் என்று கூறியிருக்கிறோம். ஆனால் இது பெரும்படி செலவுகளுக்கும் திட்டத்துக்கு மேற்பட்ட செலவுகளுக்கு மட்டுமே பொருந்தும். வரவுக்காக ஈட்டும் தொழிலை விட்டு வரவு செலவுக் கணக்கையே பெரிதாக எண்ணி நேரம் செலவு செய்பவர், வேலையற்ற சோம்பேறியாகவும் கஞ்சராகவும் இருக்க முடியும். கடனாகப் பொருள் வாங்காதவர் சிறு செலவுகளில் ஏமாற முடியாது. கணக்கைவிடக் கைப்பணத்தின் பளு அவர்கட்டு ஒரு நல்ல எச்சரிக்கை தரும். ஆகவே, கூடிய மட்டும் கடன் வாங்காதும், பொருள் முறிகளைத் தொழில் துறையிலன்றி வழங்காதும், திட்டப்படுத்தி செலவினங்களுக்குப் புறம்பான பெருஞ் செலவுகளையே குறித்தும் வருபவர்கட்குச் செலவினம் வரவினரை மிஞ்சிவிடாது; ஏமாற்றமும் விளையாது.
மதிப்புக்காக வாழும் வழக்கமுடையவர்கள், தம் தொழிலகத்தில் மட்டுமன்றி, வீடுகளிலும் வேலையாட்களை வைத்துக் கொள்வதுண்டு வேலையாட்கள் இன்றியமையாத இடத்திலோ, வேலை முழுவதையும் வீட்டுக்காரர்களே செய்ய முடியாத இடத்திலோ வேலையாட்கள் வைத்துக் கொள்வது விலக்க முடியாத ஒரு தேவையாகலாம். ஆனால், மதிப்புக்காக