பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 -- அப்பாத்துரையம் - 43 புலர்காலை எழுதல்; மேற்கொண்ட கடமை, பணிகளை வழுவாது அவற்றுக்கே முதலுரிமையளித்தல், ஓய்வு நேரங்களில் பயனுடைய நூல்களைப் பயிலல்; எவரிடமும் அன்பாயிருத் தலுடன் இன்மொழி பேசுதல்; பெண்டிரிடம் பொறுதியும், சகிப்புத்தன்மையும், பரிவும், துணை நலமும் காட்டுதல்; குழந்தை களிடம் இன்முகம் உடையராயிருத்தல்; அயலார், ஏதிலார் ஆகியவர்க்கு உதவுதல்; பகைவரிடமும் மதிப்புடன் நடத்தல்; தீய பண்புகளையும் வெளியிடாது அடக்கி, நற்பண்புகளை பாராட்டுதல் ஆகிய பல வழக்கங்கள் பழக்கங்களாகப் படியவிட்டால், அறிவுத் திறத்தில் மட்டுமன்றி இயற்கைப் பண்பிலும் மனிதன் உயர்வடைகிறான். அவன் அறிவுத் திறம் அவன் மரபினர் கற்றேயறியத் தக்கவை ஆனால், அவன் பண்புத்திறம் "கல்லாமல் பாகம் படும்" குலக்கல்வி, குடிக்கல்வி ஆகிவிடுகிறது. இத்தகைய பண்பிற் பழகிய குடியே உயர்குடியாதலால், அறிவுடையோர் தம் குடிபேணும் வகையாக, இப்பண்பு பேணக்கடவர். இளைஞர்களுக்குக் கூறும் அறிவுரைகளில் கடைசி அறிவுரையும், கடைப்பிடி அறிவுரையும் நூல்களைப் பற்றிய நூலின் ஆசிரியர்கள், காலத்தில் பழைமைப்பட்டதன் காரணமாக, அவர்கள் பழம்பொருள்கள் ஆகிவிடமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் பழைமை எவ்வளவு மிகுதியோ, அவ்வளவு அவர்கள் காலங்கண்ட பழம்புகழும் உடையவராவர். காலத்தின் அளவு, அவர்கள் புகழாகிய தங்கம் இடப்பட்ட நீண்ட நாட்புடத்தின் அளவேயாகும். ஆயினும், இப் பழைமையின் பெருமைகூட எல்லா நூல்களுக்கும் ஒருங்கே பெருமை தருபவையல்ல. சில பழைய ஏடுகள் பழங்கால ஆராய்ச்சி, வரலாற்றுச் சூழ்நிலைச் சிறப்பு ஆகியவற்றால் புகழ் அடைகின்றன. இவை வரலாற்றுச் இவை வரலாற்றறிஞர்க்கு மட்டுமே பயன்படுபவை. இலக்கிய நூல்களிலும் வரலாற்று முறையில் புகழ் பெற்றவை உண்டாயினும், இன்றும் விரும்பிப் படிப்பவையும், நமக்கு இன்றும் பயன்படுபவையும் ஆன பெரும்பான்மையான இலக்கிய ஏடுகள் காலங்கண்ட பயனுடையவையே. இவற்றை நாம் புத்தம்புதிய நூல்களினும் போற்றுவது தவறன்று. ஏனெனில், அவை காலமாகிய அரிப்பினால் சலித்துத் தேர்ந்தெடுக்கப் பட்டவை. தற்கால நூல்களின் பெருமையை நான் பழ நூல்களின்