பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. காதல் வாழ்வின் கடமைகள்

ஒருவர் செய்ய வேண்டும் கடமைகள் எவை என்று நாம் அறிஞரைக் கேட்டால்; அவர்கள் தாய் தந்தையருக்கு ஆற்றும் கடமைகள்,உடன்பிறந்தார் சுற்றத்தார்களுக்கு ஆற்றும் கடமைகள் ஆகிய குடும்பக் கடமைகளையும்; அயலார்க்கும் நண்பர்கட்கும், ஊர் நாடு உலகு ஆகியவற்றின் மக்கட்கும், நாட்டின் தலைவராகிய மன்னருக்கும் ஆற்றும் கடமைகளாகிய சமூகக் கடமைகளையும், இவை அனைத்திற்கும் பொது நிலைப்பட்ட கடவுளுக்கு ஆற்றும் கடமையையும் மட்டுமே சுட்டிக் காட்ட முடியும். இவற்றுள் சமூகத்துக்கு ஆற்றும் கடமையல்லாது “வேண்டுதல் வேண்டாமை இல"னாகிய கடவுளுக்கு ஆற்றும் கடமை தனியாக எதுவுமில்லை. சமூகக் கடமைகளோ குடும்பக் கடமைகளை அடிப்படையாகக் கொண்டவை. சமூகம் என்பது குடும்பங்களின் தொகுதி மட்டுமே. ஆகவே,எல்லாக்கடமைகளுக்கும் குடும்பக்கடமையே,அடிப்படை என்பது தெளிவு. ஒருவன் குடும்ப வாழ்வில் புகுவது காதலாலேயே. ஆதலால், காதற் கடமையே ஒருவன் வாழ்விலுள்ள கடமைகள் எல்லாவற்றுக்கும் அடிப்படையான ஒளிநிலைக் கடமையாகும். காதற் கடமையை நன்கு ஆற்றியவன், மற்ற எல்லாக் கடமைகளையும் திறம்பட ஆற்றி, இறுதிக்கடமையாகிய கடவுட் கடமையையும் ஆற்றியவனாவான்.

காதல் வாழ்வு என்பது கடமை பற்றிய கவலையும், பொறுப்புமற்ற வாழ்வு என்று பல சொத்தை இளைஞரும், சிலசமயம் சில கீழ்த்தர நங்கையரும் எண்ணித் தம் வாழ்வைப் பாழாக்குகிறார்கள். 'வண்ணாத்திப் பூச்சியைப் போலப் பகட்டித் திரிவதே, காதலின் ஒரே கடமையாக இயற்கை அமைத்துள்ளது,”என அவர்கள் எண்ணுகின்றனர். வாழ்க்கையில் அடிப்படை யுணர்ச்சியும் கடமைகளின் உயர்நிலைக் கருவூலமும் ஆகிய காதலுணர்ச்சியை, இவ்வளவு விலையற்றதாக இயற்கையன்னை