பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வுக் கட்டுரைகள்

73

எல்லாக் காரியங்களையும் தலைவன் குறிப்பு மாறாமலும் அவன் ஒத்துழைப்புடனும் தானே ஆற்றுகிறாள். குடும்பத்திற்கு வெளியிலுள்ள எல்லாக் காரியங்களையும் அதுபோல ஆடவன் அவள் குறிப்பறிந்து தானே செய்யும் வெளிநாட்டமைச்ச னாகவும், வெளிநாட்டுத் தூதுவனாகவும் செயலாற்றுகிறான். பொருள் துறையுலோ ஈட்டும் துறையை ஆடவன் ஆற்றுகிறான். அதனை பேணும் திறத்தையும், பயன்படுத்தும் துறையையும் பெண் ஆற்றுகிறாள். காதல் வழியில் நிற்கும் குடும்பங்கள், பெரும்பாலும் இவ்வியற்கை வழியில் நின்று நலம்பெறுவது

காணலாம்.

ஆணின் திறத்தைப் பெண்ணும், பெண்ணின் திறத்தை ஆணும் திறம்பட ஆற்றக்கூடாதென்றில்லை. ஆனால் இது வாழ்க்கையில் சிக்கனப்படாது. இஃது ஆங்காங்குச் சிறக்கும்; பொதுச் சிறப்பு ஆகமாட்டாது. பெண்டிர் வீரராய்ப் போரிலீடுபடுவதும், பொது பணிகளாற்றுவதும் தவறன்று. அஃது ஆடவர் இசை, நடனம், கவிதை முதலிய கலைத் துறைகளில் சிறப்பது போன்றதே யாகும். குடும்ப வாழ்வு எல்லைக்கு வெளியில் ஆண், பெண் இருவரும் தனித்தனியே செயலாற்றி தீர வேண்டுமென்றில்லை. ஒருவர் திறம் மற்றவர் திறமாகக்கூடா தென்றுமில்லை. ஆனால், வாழ்க்கையின் முதல் நிலையான குடும்பத்தில் இயற்கை நெறியே சிறந்ததாகும்.

பெண் பொருளீட்டு மிடங்களில் அதனைப் பேணும் செயலை, ஆடவனால் ஆற்ற முடிவதில்லை. குடும்ப வாழ்வை ஒதுக்கிவிடுமளவில் பெண்டிர் பொதுப் பண்பிலீடுபட்டாலும் ஆண் அவ்வாழ்வில் பெண்ணின் இடம் பெறல் முடியாத ஒன்று ஆகவே, பெண்ணின் திறங்களிணும் எல்லை விரிவு குறைப்பட்ட ஆடவனுக்கு அவனுக்குரிய பொருளீட்டல், வீரம் ஆகியவற்றை விட்டு, மீந்த திறங்களில் இருபாலாரும் பங்கு கொள்ளுதலே சால்புடையது. ஆயினும் சமூகத்தில் பெண்டிர் சமத்துவம் பேணுவதற்காகவும், தன்மதிப்பைப் பேணுவதற்காகவும், சொத்துரிமையும் பொருளீட்டும் உரிமையும் வேண்டுமெனப் பெண்கள் கோருவது தவறன்று. இது குடும்ப வாழ்வைப் பாதிப்பதாக யாரும் கொள்ள முடியாது. ஏனெனில் காதலிக்கும் குடும்பத்தில் உரிமை பற்றிய பேச்சுக்கு இடமே இருக்க முடியாது.