பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கார்ல் மார்க்ஸ் எழுதிய முதலீடு

31

அடிப்படையிலமைந்த தற்கால மனித சமுதாயத்தை உள்ளவாறு உணரமுடியாது.

(1) பொருளியல் முறையில் முதலாளித்துவத்திற்கான சூழ்நிலைகள் தொழில் வளர்ச்சியிலேயே உள்ளன. உற்பத்தித் தொழில் வளருந்தோறும் மூலப்பொருள்களைப் பேரளவில் திரட்டும் அவசியம் நேர்கிறது. தொழிலாளர் கூட்டுறவால் இயல்பாக ஏற்படும் உற்பத்திப் பெருக்கைத் தொழிலாளர் தாங்களே பயன்படுத்த முடியவில்லை. ஆதாய நோக்கங் காண்ட வணிகர் போல ஆதாய நோக்கங்கொண்ட முதலாளி வகுப்பே அதைச் செய்ய முடிந்தது. மூன்றாவதாக, உற்பத்தித் தொழிலின் இயந்திர சாதன வளர்ச்சி மூலம் தொழிலாளர் மதிப்புக் குறைந்து, இயந்திரக் கருவிகளின் மதிப்பு பெருகிற்று. இயந்திரக் கருவிகளையும் மூலப் பொருள்களையும் வழங்கும் ஆற்றலுடைய முதலாளிகளே உழைப்பையும் விலை கொடுத்து வாங்க முடிந்தது.

ஒரு

(2) பொருளியல் துறையில் ஏற்பட்ட தொழிலாளி வகுப்பின் புதிய அடிமைத்தனத்துக்குச் சமுதாயத்துறையிலும் அரசியல், சமயத்துறைகளிலும் முன்னாலிருந்த பழைய அடிமைத்தனங்களே பேரளவில் காரணமா யிருந்தன. தொடக்கக்காலச் சமுதாயத்தில் வலிமை மிக்கவரே உயர்ந்தோராயிருந்து ஆட்சி நடத்தினர். தவிர போரில் தோற்றவர்களும் சில சமயம் தோற்ற ஒரு நாட்டினர். அல்லது இனத்தினரும் முழுவதும் அடிமை களாக்கப்பட்டிருந்தனர்.

வ்வடிமைகளே உலகின் முதல் உழைப்பாளிகள். ஓரினத்தை ஓரினம் அடிமையாக்கிச் சுரண்டும் முறை நாகரிக மிக்க கிரேக்கரிடையே மட்டுமன்றி, 18ஆம் நூற்றாண்டு வரை மேனாடுகளிலும், அமெரிக்காவிலும் இருந்து வந்தது.

உழைப்பின் மதிப்பு சமூகமதிப்பு என்று கண்டோம். சமூகத்தில் எல்லாரும் ஒரே தன்மையாகத் தற்காப்பும் சுதந்திரமும் உடையவர்களாயிருந்திருந்தால், தொழிலாளி இனம் என்றும், முதலாளி இனமென்றும், அறிவீனம் என்றும் உலகில் பிரிவுகள் ஏற்பட்டே இருக்கமாட்டா. தொடக்கக்கால உயர்வு தாழ்வுகளே இவ் வேற்றுமைகளுக்கு வேர் முதலாயிருந்தன என்பது தவறல்ல. ஆட்சியுரிமையும் சுதந்திரமும் உடைய மக்களே சமுதாய