பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கார்ல் மார்க்ஸ் எழுதிய முதலீடு

39

தொழிலாளி தனித் தொழிலாளனாயிருந்தபோது அவன் உற்பத்திச் சாதனமும் உழைப்பும் அவனுக்குரியதா யிருந்தது. அவற்றுக்குரிய மதிப்புடன் அவன் உழைப்புக்கு மூலகாரணமான உடலின் தேய்மான மதிப்பாகிய வாழ்க்கை ஊதியமும் சேர்த்தே சரக்குவிலையாக அவனுக்குத் தரப்பட்டது. இப்போது உற்பத்திச் சாதனம் முதலாளிக்குரியதாகிவிட்டதுடன் உழைப்பும் அவனுக்கு முன்கூட்டி விற்கப்பட்டுவிட்டது. உழைப்பை விற்றதனால் அவன் தன் உடலையும் குறிப்பிட்ட காலத்துக்கு முதலாளிக்கு விற்றதாக அவன் எண்ணி விடுகிறான். உழைப்பு விலையை முன்கூட்டி அவன் உறுதி செய்ததனால், அதன் மதிப்புடன் சேர்த்துச் சமூகம் தரும் வாழ்க்கை மதிப்பையும் அவன் இழக்க நேரிடுகிறது.

வாழ்க்கை நலமதிப்பு

மிகை மதிப்பு முதலாளியின் முதலீட்டை வரவரப் பெருக்குவதுடன் உழைப்பு மதிப்பு வரவரக் குறைந்து உருக்குலைந்து விடத் தக்கதாயிருக் கிறது. இங்கும் முதலாளித்துவ சமுதாயத்தின் மாயத்திரை பல பொருளியல் மாற்றங்களைத் தொழிலாளியின் கண்களில் படாமல் தடுக்கிறது.

தொழிலாளியின் உழைப்பை முதலாளி விலைக்களத்தில் பெறும் சமயத்திலேயே, சமூகத்தில் அவ் இருசாரார் நிலையிலும் உயர்வு தாழ்வு ஏற்பட்டுள்ளது. தொழிலாளி வாழ்க்கையில் இன்னலுக்காளாய், கீழ் நிலைக்குச் சறுக்கிச் செல்லும் னத்தவனாய், வாழ்க்கையைப் பிழைப் பூதியத்துக்கு அலர்ந்து லைக்களம் வந்திருக்கிறான். முதலாளிக்கோ வாழ்க்கை ஒரு பிரச்சனையல்ல. அவன் பிரச்சனை ஆதாயம் அடைவது. அதுவும் தன் உழைப்பால் அல்ல. பிறர் உழைப்பை விலைக்கு வாங்கி அதன்மீது சூதாடுவதால்! இருவரிடையே ஏற்படும் பேரம் வங்ஙனம் சமநிலையிலில்லாதவர்கள் பேரம் ஆகிறது. முதலாளிக்குப் பேரம் செய்யவும் தன் உரிமை உண்டு. தொழிலாளியை அவன் ஏற்கலாம், அல்லது மறுக்கலாம். னெனில் அவன் வாழ்க்கைக்குத் துடிக்கும் நிலையில்லை. மேலும் அவன் ஒருவன், தொழிலாளி பலர். ஆனால் தொழிலாளிக்கோ பேரத்தில் தன் உரிமை கிடையாது. வாழ்க்கைப் பிழைப்புத் தவிர வேறு எதுவும் கேட்க அவனுக்கு