பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

அப்பாத்துரையம் - 45

வாயில்லை. இந்நிலையில் பேரம் தொழிலாளிக்குப் பாதகமா யிருப்பதில் வியப்பு இல்லை. வியப்பு என்னவென்றால், தொழிலாளி பேரம் முடிந்தபின்னும் தொடர்ந்து அதே நிலையி லிருப்பது தான். இதற்குக் காரணம் இல்லாம லில்லை. அவன் பறும்.கூலி அவன் வாழ்க்கைப் பிழைப்பில் கூட நாள் பிழைப்புக்கு மட்டுமே வகை செய்கிறது. வாழ்க்கைச் செலவுகளில் உணவு முதலிய சில செலவுகள் நாள் செலவுகள், உடை முதலியன இன்னும் சற்று நீண்டகாலத் தேவை. உறையுள், குடும்பச் செலவு, கல்வி முதலியன இன்னும் நீண்டகாலத்துக் கொருமுறை திட்டமிட்டுச் செலவு செய்ய வேண்டிய செலவினங்கள், தொழிலாளியின் கூலி நாட் செலவுக்கு மட்டுமே போதியதா யிருப்பதால் மற்றச் செலவுகள் அவனை ஓயாமல் கடனிலும், வறுமையிலும் நோயிலும் அழுத்துகின்றன.

பொருள் விற்பவன் அதன் விவரம், எண்ணிக்கை அளவு கூறித்தான் விற்பான். தொழிலாளி விற்கும் பொருள் சமுதாயத்தில் விற்பனைப் பொருளாகக் கணிக்கப்படாதது. ஆகவே அதன் வரையறையும் அளவும், தெரியாமல் அவன் தன் உழைப்புடன் உடலின் வாழ்க்கை நலத்தையும் விற்றுவிடுகிறான். ஆனால் சமூகமோ சரக்கின் உழைப்பு மதிப்பாகத் தரும் விலைமதிப்பின் உள்ளீடாக அவன் உழைப்பு மதிப்பை மட்டுமன்றிப் பொருள்களின் மதிப்பு, கருவிகளின் மதிப்பு, அவன் உடல்நல மதிப்பு ஆகியவற்றையும் சேர்த்தே கொடுக்கிறது. ஆனால் அவன் அவற்றின் கணக்கறியாமல் பொருள் மதிப்பு, கருவி மதிப்பு ஆகியவற்றுடன் தன் உடல்நல மதிப்பையும் முதலாளியே தட்டிப் பறிக்கும்படி விட்டுக் கொடுத்துத் தளர்வுறுகிறான். தன் செல்வமறியாது தடங்கெடும் இளம் பிள்ளை நிலையை ஒத்தது அவன் நிலைமை.

மிகை மதிப்பின் அளவையே வேறொரு வகையிலும் காட்டலாம். அவன் வாழ்க்கைப் பிழைப்புக்காகப் பெறும் நாட்கூலி அவன் நாள் உழைப்பில் ஒரு பகுதி உழைப்புக்கே சமமாகும். பெரும்பாலும் இது 6 மணிநேர உழைப்புக்கு மேற்படாது. ஆனால் தொழிலாளியிடம் முதலாளி நாள் பிழைப்புச் செலவு கொடுத்து நாள் பிழைப்பு முழுவதையும் வாங்குகிறான். இதனால் நாள் முழுதும் உழைத்தாலும், தன்னை விற்ற நாளடிமையாகிய தொழிலாளிக்கும் பிழைப்புத் தவிர