பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கார்ல் மார்க்ஸ் எழுதிய முதலீடு

41

வேறுவகை கிடையாது. அவன் பிழைப்பூதியம் போக மீந்த உழைப்பு முழுவதையும் அதாவது தன் உழைப்பின் பயனில் நேர்பாதிக்குமேல் இழக்க வேண்டியவ னாகிறான்.

தவிர உற்பத்திச் சாதனம் இல்லாத ஒரு காரணத்தால், கருவி முன்னேற்றத்தால் ஏற்படும் சாதகபாதக நிலைகளில், சாதகங்களை முழுவதும் முதலாளிக்கு விட்டுவிட்டுப் பாதகங்கள் அத்தனையையும் தொழிலாளியும் தொழிலாளி இனமுமே நுகர்கின்றனர். நூறு பேர் முன் உழைத்த கருவியில் இயந்திரக் கருவி முன்னேற்றத்தால் ஐம்பது பேரே தேவைப்பட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். முதலாளி நூறுபேர் வேலை நேரத்தை நேர்பாதி குறைத்து அவர்களுக்கு ஓய்வு நேரத்தைப் பெருக்கலாம். அது செய்வதில்லை. நூறு பேர் ஊதியத்தை ஐம்பது பேருக்குக் கொடுத்து அவர்கள் ஊதியத்தை இரட்டிப்பாக்கலாம். அதுவும் செய்வதில்லை. நூறு தொழிலாளியில் ஐம்பது தொழிலாளியைக் குறைத்து அவர்களுக்குரிய ஊதியப் பங்கைத் தான் எடுத்துக்கொள்கிறான். கூடுதல் சரக்கு உற்பத்தியாகி, விற்பனை பெருகி, ஆதாயம் மிகுந்தாலும், அதன் பயனைத் தொழிலாளியின் உழைப்புடன் அவன் தொடர்புபடுத்துவ தில்லை.

ஒவ்வொரு தொழிலாளியின் உழைப்பிலும் கிட்டத்தட்ட ஒரு பாதிக்கு மேல் மிகைமதிப்பாக முதலாளியின் கைக்குப் போய்ச் சேர்கிறது. ஆண்டுக் கணக்கில் ஒவ்வொரு தொழிலாளியின் மிகைமதிப்பும் பெருகுகிறது தொழிற்சாலையில் பன்னூறாயிரம் தொழிலாளர் வேலை செய்கின்றனர். அத்தொகையால் பெருக்க, மிகைமதிப்பு மிகப்பேரளவு அடைகிறது. பல தொழில்களில் முதலீடாகப் போட்டதொகை முழுவதும், மிகைமதிப்பு வடிவிலேயே ஒரு சில ஆண்டுகளுக்குள் முதலாளிக்குக் கிடைத்து விடுகிறது. ஆனால் தொழிலாளியினம் சமூகத்தின் சாக்கடைக் குழியிலேயே என்றும் கிடக்கவேண்டிய நிலையிலிருக்கிறது.

ஏற்றத் தாழ்வானவர்களின் பேரம்

மிகைமதிப்பு என்பது உண்மையில் உழைப்பு மதிப்புப் போக மீந்த விலைமதிப்பேயாகும். சரக்கின் விலைமதிப்பில்