பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

அப்பாத்துரையம் - 45

பொருள் நூல் அறிஞர்: "உம் வேலையைப் பாரும் ஐயா, ஏதோ ஆள் தரம் தெரியாமல் இப்படிப் பேசுகிறீர்? மதிப்பாகப் போகிறீரா, அல்லது..."

(வாயில் காப்போன் கைத்தடியுடன் அருகில் வந்தான். முதலாளித்துவம் தன் மூலமுதல் வடிவத்தை-வல்லான் ஆட்சி நிலையையே காட்டிவிட்டது என்று எண்ணித் தொழிலாளர் நண்பர் வெளியேறினார்.)

முடிவுரை

முதலாளித்துவம் ஒரு பொருளியல் வாதம் மட்டுமன்று. அது ஒரு சமுதாய அமைப்புமுறை. அத்துடன் அது ஒரு காட்டு நீதிமுறையும் ஆகும். வரலாற்றடிப்படையாக மனித சமுதாயத்திலே ஏற்பட்டுள்ள உயர்வு தாழ்வுகளின் மீது எழுந்த ஒரு காட்டு வளர்ச்சி அது. மனித நாகரிகத்தின் பல முன்னேற்றப் பண்புகளை அது. மேலீடாக ஏற்றுப் பூசி மெருகிட்டுப் பகட்டிக்கொண்டாலும் உள்ளூர அதன் அநாகரிக காலக் காட்டுப் பண்புகள் மாற்றமடையவில்லை. அதன் புறப்பூச்சு பல பசப்பு வேதாந்தங்களால் அணி செய்யப்பட்டுள்ள தாயினும், கூர்ந்து கவனித்தால், அப்பசப்பு வேதாந்தங்களுக்குள்ளே ஆதாய நோக்கம், சுரண்டுதல் கோட்பாடு, குறுகிய தன்னல மடமை ஆகியவை தெளியும்.

சமதர்மம் முதலாளித்துவ நாகரிகம் என்ற காட்டு வளர்ச்சியை அழித்தொழிக்கும் நோக்கம் மட்டும் கொண்டதல்ல. அதனைத் திட்டமிட்ட தோட்ட வளர்ச்சியாகச் செப்பம் செய்து காட்டின் உரத்தையும் செல்வத்தையும் கொண்டே நாட்டுவளம் பெருக்க அது விரும்புகிறது.