பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. சமூக உரிமை

அரசியல் சமூக வாழ்வின் அமைதி முறைகளை ஆராய்ந்து வழிவகுக்க ஒருவன் மன்னனாகவோ, மன்னுரிமைச் சட்டங்கள் வகுப்பவனாகவோ இருக்க வேண்டியதில்லை. அவ்வாறு இருந்தால், அவன் அவற்றுக்கு வழிகாட்டமாட்டான்; அவற்றைச் செயலாற்றுவான். தவிர ஒரு சுதந்திர நாட்டில் பிறந்து, அதன் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை உடையவன் என்ற முறையில், ஆளும் வகைபற்றி அவர்களுக்கு என் கருத்தைத் தெளிவுபடுத்தும் கடமை எனக்கு உண்டு. இந்நூல் அதை ஆற்றுகிறது.

மனிதர் பிறப்பது சுதந்திரமாகவே. ஆனால் எங்கும் வாழ்வில் அவர்கள் கட்டுண்டு கிடக்கின்றனர். பிறப்புக்கும் வாழ்வுக்கும் இடையே இந்த மாறுபாடு எப்படி வந்தது?

அடிமைகளின் தலைவர்கள்என்று சிலர் தம்மைக் குறித்துக் கொள்வதுண்டு. அவர்களும் அடிமைகளே.

அரசியலாட்சியும் சமூக ஆட்சியும் மனிதருக்காக அமைந்தவையே. மனிதர் அரசியல் ஆட்சிக்காகவும் சமூகத்துக்காகவும் அமைந்தவர் அல்லர்.

சமூகம் ஒரு பெரிய குடும்பம்: குடும்பம் ஒரு சிறிய சமூகம். குடும்பத்தில் பிள்ளைகள் நலத்துக்காகத் தந்தை அவர்கள் இயற்கை யுரிமையைத் தாம் கைக்கொண்டு செயலாற்றுகிறார். பிள்ளைகள் தேவை தீர்ந்த கணமே, தந்தையும் பிள்கைளும் ஒரே நிலையடைந்து ‘மக்கள்' ஆகின்றனர். அதற்குப் பின்னும் தந்தை உரிமையாட்சி நீடிக்கலாம். ஆனால் து முந்தைய

இயற்கையுரிமையன்று

சமூகத்திலும் மக்கள் நலத்துக்காகவே சமூகத் தலைவரும் ஆட்சியாளரும் அவர்கள் இயற்கை உரிமைகளைக் கையாளு