பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ரூசோவின் சமூக ஒப்பந்தம்

51

கின்றனர். தத்தம் நலங்கருதியே, ஆக்கம் கருதியே, மக்கள் தம் இயற்கை உரிமையைப் பொது உரிமையாகச் சமூகப் பொதுமைக்கு விட்டுக்கொடுக்கின்றனர்.அப்பொது வுரிமையில் அவர்கள் பங்கு, அவர்கள் குடியுரிமை. அப்பொதுவுரிமையைக் காப்பதில் அவர்கள் பங்கு, அவர்கள் கடமை. தலைவர் கடமையை இயக்கும் முழு பொறுப்பும் ஏற்று, அதற்காகவே முழு உரிமையையும் கையாளுகின்றனர்.

என்று

சிலர்

உரிமை, வலிமையால் ஏற்படுவது கருதுகின்றனர். இது தவறு. வலிமையால் ஏற்படும் ஆதிக்கம் வலிமையாலேயே என்றும் காக்கப்பட வேண்டும். வலிமையால் அது போக்கப்படவும் முடியும், வலிமை இருக்குமளவே அது இருக்கும். ஆகவே வலிமையால் ஏற்படும் ஆதிக்கம் ஆதிக்கமட்டுமே, உரிமை ஆட்சி ஆகாது. வலிமைக்கு அடங்கி நடப்பது அடிமை, அச்சம், கோழைமை, அறியாமை ஆகலாம்; கடமை ஆகாது.

'ஆளப்படுபவர் நலனுக்காக ஆட்சி' என்பதை அறிஞர் குரோட்டியஸ் மறுக்கிறார். அடிமை முறையைச் சுட்டிக்காட்டி ஆட்சியுரிமை ஆட்சியால் ஏற்படுவதே என்கிறார். ஆனால் மனித இனம் பேரரசர் காலிகுலா கருதியது போல், ஒரு சில மனிதக் கோனார்களுக்குச் சொந்தமான மனித ஆட்டுமந்தை அல்ல. ஆளப்படுபவரைப் போல, ஆள்பவரும் மனிதரே.

“சிலர் சுதந்திர உரிமை பெறப் பிறக்கிறார்கள்.சிலர் அடிமை நிலை பெறவே பிறக்கிறார்கள். அடிமை நிலையை அவர்கள் விரும்பி ஏற்பதையும் காண்கிறோம்" என்கிறார் அரிஸ்டாட்டில். அடிமையான ஒரு தந்தையின் அடிமைத் தனத்தை அவர் பிள்ளை இயற்கையாக ஏற்பதையே இங்கே அரிஸ்டாட்டில் குறிப்பிடுகிறார். ஆனால் முதல் அடிமைத்தனம் பிறப்பினால் ஏற்பட்டிருக்க முடியாது. வலிமை காரணமாக அல்லது அச்சம் காரணமாகவே ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை அரிஸ்டாட்டில் கவனிக்கவில்லை. அதே சூழ்நிலை இருக்கும்வரை அது தலைமுறை தலைமுறையாக நீடித்து இருக்கலாம். ஆனால் அடிமையின் பணிவு எப்போதும் அச்சம், கோழைமை, மடமை ஆகியவற்றுள் ஒன்றின சின்னமாகவே இயலக்கூடும். தன்