பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ரூசோவின் சமூக ஒப்பந்தம்

55

வளர்கிறது. இவ்வறிவின் கருவியாக மொழியும், எழுத்தும், இலக்கியமும், நூலும், நூல் துறைகளும் வளர்கின்றன.

கூட்டுறவின் உரிமை, உறுப்பினர் அனைவரின் இயற்கை உரிமைகளின் தொகுதி. சமூக உறுப்பினர் அதைச் சரிசமமாகப் பங்கிட்டு ஒரு பகுதி உரிமையைத் தம் சமூக உரிமையாகக் கொள்கின்றனர். தனித் தனி உரிமையின் இச் சரிசம நிலையையே நாம் நேர்மை என்கிறோம். அதைப் பேணும் முறைகளையே ஒழுங்கு, சட்டம் என்கிறோம்.

முழுமுதல் உரிமை என்றும் கூடவோ குறையவோ மாறவோ செய்ய முடியாது. ஏனெனில் அது கூட்டுறவின் எல்லாத் தனி மனிதரின் உரிமைகளின் கூட்டு முதல் மட்டுமே. அது தனி மனிதர் இயல்பாக, தம்மிச்சையாக அளித்ததாதலால், அவ்வுரிமை பொதுவிலிருந்து என்றும் எடுபடவோ குறையவோ மாட்டாது.ஆகவே முழுமுதல் உரிமைக்கும் எந்த வரையறையும் கட்டுப்பாடும் கிடையாது. அது முழுநிறை உரிமை (sover eignty) ஆகும்.

தனி மனிதன் விருப்பம் அவன் குடி உரிமை எல்லைக்குள் நிற்பதல்ல. ஏனென்றால் குடி உரிமை பொதுவிருப்ப அடிப்படையிலமைந்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது. இப் பொதுவிருப்பத்துக்கு மாறாக நடக்கத் தனி மனிதன் முயலும்போதெல்லாம். பொது விருப்பம் அதாவது சமூக விருப்பம் அவனைத் தடுத்துத் தண்டிக்க உரிமை பெற்றிருக்கிறது. இது சமூக ஒப்பந்தத்தின் ஒரு கூறு. ஆனால் தனி மனிதன் விருப்பம் தனி மனிதர்கள் விருப்பமாகப் பரவிப் பொது விருப்பம் ஆகவே வழியுண்டு. அப்போது அது புதிய சமூக உரிமை ஆகிவிடும். எனவே சமூக ஒப்பந்தத்தால் முழுமுதல் உரிமையும் கட்டுப் பாடற்று வலுவடைந்து வளர இடம் இருக்கிறது. தனி மனிதர் உரிமையும் கட்டுப்பாடற்று வளர இடமிருக்கிறது. முழு முதலுரிமையும் தனி மனிதனுரிமையும் காதலன் - காதலி உ உரிமை போல, ஒன்றை ஒன்று தொதிந்து, ஒன்றை ஒன்று வளர்க்கும் திறம்

உடையவை.

தனி மனிதன் இயற்கை உடைமை சமூகத்தில் பொது உடைமை தனி உடைமை என்ற இரு வடிவம் பெறுகிறது.வீடுகள்.