பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

83

ம்

தொழிற்சாலைகள், நிலம், போக்குவரவுச் சாதனம், கப்பல்கள் முதலியன யாவும் கூட்டு முறையில் உடைமை யாகலாம். இரண்டாவதாக மக்கள் ஊதிய உழைப்புப் பணி ஒன்றைப் பெற உரிமையளிக்கப்படுவர். அதாவது ஊதிய இடம் தேடுவதற்கும் தேடிப் பெறுவதற்கும் உரிமை தரப்படும். ஊதிய இடம் கிட்டாததனால் இவ்வுரிமையை அவர்கள் நடைமுறையில் செயற்படுத்த முடியாவிட்டால், அவர்கள் அரசியலிடம் உதவித் தொகை (benefit) கோரலாம். மூன்றாவதாக, ஒவ்வொருவரும் உடல் வலிவிழப்பு மூலம் உழைக்க முடியாதபோது அவர் தம்மைப் பாதுகாக்கும் படி அரசியலைக் கோரும் உரிமை அவருக்கு உண்டு. அதாவது குழந்தைப்பருவம், நோய், கருப்பகாலம், முதுமை ஆகிய காலங்களில் அரசியலே வாழ்க்கைப் பாதுகாப்புக்குப் பொறுப்பு எடுத்துக் கொள்ளும். இலவசத் தொடக்கக் கல்வியும் இலவச உயர்தரக் கல்வியும் அளிக்கப்படும். மக்கள் அரசியலுக்கு ஊறு செய்யாதவரை எண்ணங்களின் சுதந்திரம், சங்கமாகக் கூடும் சுதந்திரம் ஆகியவை தரப்படும். சமூகத் துறையில் முழுச் சுதந்திரம் நிலவும். அதாவது எந்தத் தனி ஆளோ வகுப்போ மற்றவர்களை விட உயர்வாக மதிக்கப்படவோ, அல்லது மிகுதி உரிமைகள் வழங்கப்படவோ மாட்டாது. சமதர்மம் ஒத்துக்கொள்ளும் வேறுபாடுகள் இயற்கையினால் ஏற்படுபவை மட்டுமே. மிகுதி திறமையும் உழைப்பாற்றலும் உடையவர்கள் மற்றவர்களைவிட மிகுதி பெறுவர். இறுதியாக மனிதனிடமிருந்து மனிதனையும், வகுப்பினிடமிருந்து வகுப்பையும் பிரிக்கும் தேசியப் பிரிவினைத் திரைகள் யாவும் அகற்றப்படும். இதன் பயனாக மனித வகுப்பினரிடையே எண்ணங்களும் பொருள்களும் தங்குதடையற்ற முறையில் பரிமாறிக்கொள்ளப்படும்.

வினா (51) : இதிலிருந்து சமதர்மம் ஒரு தேசியக் கோட்பாடல்ல என்றாகிறது அல்லவா?

விடை : அல்லதான். ஒருபோதும் அல்ல. சமதர்மம் ஒரு சர்வதேசக் கோட்பாடு. அதன் வெற்றி தேசத்துக்குத் தேசமாகப் பரவக்கூடுமாயினும் சமதர்மம் முழுப்பயனும் பெற அது உலகெங்கும் பரவியாக வேண்டும் என்ற அடிப்படையிலேயே சமதர்மக் கோட்பாடு அமைந்துள்ளது. ஒவ்வொரு சமதர்ம