பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

அப்பாத்துரையம் - 46

இயக்கத்தின் முக்கிய முயற்சியும் உலக ஒற்றுமை உண்டாக்கு வதும் ஒரே உலக அரசியலை உருவாக்குவதுமே யாகும்.

வினா (52) : ஒரே உலக சமதர்ம அரசியலை நிறுவுவதென்பது பிரமாண்டமான வேலையல்லவா?

விடை : அது பிரமாண்டமானதே. ஆயின் ஓரளவில்தான் பிரமாண்டமானது. ஒவ்வொரு நாட்டு மக்களும் தத்தம் நாட்டில் ஒரு சமதர்ம அரசியலை நிறுவ முயற்சி செய்ய வேண்டும்.

வினா (53) : சமதர்ம முறையில் அரசியல் எவ்வாறிருக்கும்?

விடை: சமதர்ம அரசியல் எந்த அடிப்படை உரிமைகளின் மீது அமைக்கப்படும் என்பதை நான் ஏற்கனவே விளக்கி யுள்ளேன்.நடைமுறை அரசியலைப் பற்றிய மட்டில் அரசியலின் காரியங்களை ஆற்றும் ஆட்பேர்களைத் தேர்ந்தனுப்ப ஒவ்வொருவருக்கும் உண்மையான உரிமை இருக்க வேண்டும். இது தவிரச் சமதர்ம அரசியல் துறையில் வேறு திட்டவட்டமான திகள் எதுவுமில்லை. முதலாளித்துவ அரசியல்களிடையே கூட ஆட்சி அரசின் மாதிரிகள் வேறுபடவே செய்கின்றன.பிரிட்டனின் அரசியல் மன்றம் (Parliament) அமெரிக்க சபையினின்றும் (Senate), பொதுச் சபையினின்றும் (Congress), ஃபிரஞ்சு நாட்டு ஆட்பேரவையினின்றும் (Chamber of Deputies) வேறுபட்டுள்ளன. சமதர்ம அரசியல் களிடையேயும் இதே போன்ற வேறுபாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதனைக் களையத் தேவையில்லை. எடுத்துக்காட்டாக ரஷ்ய சோவியத் முறையைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதன்படி மக்கள் நிலப்பகுதிவாரி யாகவோ தொழில்வாரியாகவோ குழுக்களைத் (Committees) தேர்ந்தெடுக்கின்றனர்; குழுக்கள் தம் மேற்குழுக்களைத் தேர்ந்தெடுக்கின்றன. முடிவாக உயர்நிலை மக்கள் மன்று,

சோவியத் இயங்குகின்றது.

வினா (54) இன்னொரு கேள்வி : பார்வைக்கு இது ஒரு அறிவிலாக் கேள்வியாகத் தோற்றக்கூடுமாயினும் கேட்டே தீர வேண்டும். சமதர்ம அரசியல்களுக்கிடையே போர்கள் எவையும் நிகழ முடியாது?

விடை : முடியாது. முன்னறிந்து கூறல் பொதுவாக அரிதாயினும், சமதர்ம உலகில் போர் ஏற்படவே செய்யாதென்று கூறலாம். நாம் கூறியுள்ளபடி சமதர்மக் கருத்தே சர்வதேசப்