பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

அப்பாத்துரையம் - 46

தத்துவங்களைக் கொண்ட சமதர்மம் மட்டுமே அவர்கள் வறுமை நிலையைப் போக்கும். அதாவது அவர்கள் தம் எதிர்கால வாழ்க்கையின் ஆக்கம்பற்றித் தன்னுணர்வுடையவர் ஆக்கப்பட வேண்டும்.இந்நாட்டு வறுமையின் கோரரூபம், அதன் காலடியில் துவண்டு மக்கள் அடையும் துயரம் ஆகியவை ஐரோப்பிய மக்களைவிட மிகுதியாக அவர்களைச் சமதர்மத்தில் ஆர்வம் கொள்ளும்படி செய்யத்தக்கவை. ஏனெனில் ஐரோப்பாவில் முதலாளித்துவத்தின் சுரண்டல் எவ்வளவானாலும் மக்கள் தம் நாடுகளின் ஏகாதிபத்திய ஆட்சியின் பயனாகச் சில நலன்கள், சிறிதளவு நலன்களேனும் பெற்றே உள்ளனர். எடுத்துக்காட்டாக ஐரோப்பிய உழைப்பாளிக்கு இந்திய உழைப்பாளியைவிட மிகுதி சம்பளம் தரப்படுகிறது. இந்நிலையினாலேயே ஐரோப்பாவில் மாற்ற ஆர்வம் சிறிது மழுங்கியுள்ளது. இத்தகைய உதவிகள் பெறாத இந்திய உழைப்பாளி உடனடியான, அடிப்படையான மாறுதலை விரும்புபவனாயிருக்கிறான். எனவேதான் சராசரி இந்தியனின் மனம் ஐரோப்பியரைவிட சமதர்மத்தை ஏற்க மிகுதியான பக்குவ நிலையிலுள்ளது என்று கூறினோம்.

மற்றும் ஒரு செய்தி இங்கே கவனிக்கப்படவேண்டும். நாமே மேலே கண்டுள்ளபடி முதலாளிகள் தம் தொழில்களையும் தொழிலாட்சிகளையும் கவனிக்க அறிவு வகுப்பினர் ஊ ஊழியத்தைப் பெற்றாகவேண்டும். ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள் தம் அறிவு வகுப்பின் பெரும் பகுதியைத் தம் பொருளியல் அமைப்புக்களில் ஈர்த்துக் கொண்டுள்ளன. இதனால் அவர்கள் பொருள் துறையில் நல் நிலையுடையவராயிருக்கின்றனர். இது காரணமாகத் தான் இவ்வகுப்பு முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாப்பதில் அக்கறையுடைய தாயிருக்கிறது. இதற்கு மாறாக இந்தியாவின் அறிவு வகுப்பு மிகச் சிறு தொகையானது. அதில் ன்னும் மிகச் சிறு தொகுதியே நன்னிலையிலுள்ளது. இந்திய நடுத்தர வகுப்பினர் பொருளியல் துறையில் மிகவும் துன்ப மெய்துகின்றனர். இந்திய அரசியல் இயக்கத்தில் அவர்கள் முனைந்து காணப்படுவது இதனாலேயே. ஆகவே வகுப்பு வாரியாகப் பார்த்தாலும் இந்தியாவில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள மற்ற நாடுகளைவிட மிகுதியான வகுப்புகள் தற்போதைய நிலையில் மாறுபாட்டில் அக்கறை யுடையவை யாயுள்ளன.