பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

89

கடைசியாக, ஐரோப்பா பல நாடுகளாக வகுக்கப்பட்டுள்ளது. இது அங்குள்ள சமதர்ம இயக்கங்களைப் பாதிக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் அதற்கென ஓர் இயக்கமும் ஒரு கட்சியும் அதற்கெனத் தனித்திட்டங்களும் உள்ளன. இதனால் இவ்வியக்கங்கள் பலவீன முடையவை. இதற்கு மாறாக இந்தியா ஐரோப்பாவின் எல்லா நாடுகளும் சேர்ந்தால் எவ்வளவோ அந்த அளவு பெரிதா யுள்ளது. மக்கள் தொகையோ, அதன் இரட்டியுடைய தாகும். ஆகவே ஐரோப்பாவுக்கு முற்பட்டுச் சமதர்மம் இந்தியாவிற்கு வருவதற்கான சாதக நிலைகள் மிகுதி. இதனை ஒரு சாதகநிலை என்று மட்டுமே பொதுவாகக் குறிப்பிட்டுள்ளோம்; அதற்கு மேற்பட்டதன்று. ஏனெனில் உண்மையில் சென்ற உலகப் போருக்குப்பின் ஐரோப்பாவும் எவ்வளவோ இன்னல்கள் அடைந்துள்ளது. அதன் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்துவிட்ட தோடு இன்னும் வீழ்ச்சியடைந்துகொண்டே வருகிறது. இதனால் நடுத்தர வகுப்பினர் நிலை மோசமாகி வருகிறது. இந்நிலையில் அங்கும் சமதர்மம் ஒன்றே நெருக்கடியைச் சமாளிக்கும் வகையாயுள்ளது. ஆயினும் பல நாடுகளாகப் பிரிவுபட்டிருக்கும் தடங்கலை அவர்கள் இன்னும் கடந்தேயாகவேண்டும்.

வினா (57) : பிரிட்டன் இன்னும் (மறைவாகவேனும்) இந்தியாவை ஆளுகிறதென்பது உங்களுக்கு நன்கு தெரிய வரலாம். சமதர்மத்தைப் புகுத்துவதன் முன்பு, பிரிட்டிஷ் ஆதிக்கத்தை முழுவதும் அகற்றிவிட வேண்டியது இந்திய மக்களின் முதற் கடமையல்லவா? பிரிட்டிஷ் சக்தி முழுவதும் வெளியேற்றப் படுமுன் நம் இயக்கத்திற்குள் பிளவுகளையும் தனிப்பிரச்சனைகளையும் கொண்டு வருவதுதான் நலமாகுமா?

விடை:மேற்போக்காக இது ஒரு நல்ல தர்க்க முறையென்று தோற்றலாம். ஆனால் உண்மையில் அப்படியன்று. மக்கள் முன்னிலையிலுள்ள முதல் கடமை தெளிவானதே. அது பிரிட்டிஷாரை அகற்றி இந்திய விடுதலையை மெய்யான விடுதலை ஆக்குவதேயாகும். ஆனால் அதற்காகச் சமதர்மத்தை ஒதுக்கிவைக்க வேண்டுவது எதனால் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. சமதர்மம் என்பது பிரிட்டிஷாரை இந்தியாவில் நிலைநிறுத்துவதற்காக ஏற்பட்டதா என்ன? இது அதற்குத் தீங்குதரும் இயக்கமன்று; மாறாக, நலம் புரிவதேயாகும். சமதர்ம இயக்கம் பிளவுகளும் உட்கட்சிகளும் உண்டுபண்ணுமே எனப் படில், அதுவும் உண்மை நிலைக்கு மிகு தொலைவிலுள்ளதே.