பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

அப்பாத்துரையம் - 46

ஏனெனில் உண்மை இதற்கு நேர்மாறானது. சமதர்மம் வெளிநாட்டுக் கெதிராக உறுதிவாய்ந்த எதிர்ப்புச் செய்கிறது. ஆனால் தேசிய இயக்கத்திலுள்ள வேறு சக்திகள் சில அடிக்கடி எதிர்ப்பைப் பலவீனப்படுத்தி, பிரிட்டிஷ் சக்தியுடன் சமரசம் செய்யப் பார்க்கின்றன. எடுத்துக்காட்டாக, தேசிய காங்கிரஸ் மௌண்ட் பேட்டன் திட்டத்தை ஏற்றுக்கொண்டதைக் கவனியுங்கள்! இது இந்தியா பாகிஸ்தான் பிரிவினையைக் கொண்டுவந்தது மட்டுமல்ல; இந்திய தேசிய வாழ்வில் பிரிட்டிஷ் தொழிலையும் அரசியல் சூழ்ச்சி வாழ்வையும் (இராஜதந் திரத்தையும்) நன்கு வேரூன்ற உதவும் வகையில் அமைந்துள்ளது.

து

தேசிய இயக்கத்தில் சமதர்ம இயக்கத்தின் பங்கு, உடலில் செந்நீருக்குள்ள பங்கு - அது வலிவு தந்து அரண் செய்யும் பண்பு ஆகும். மேலும் தேசிய அமைப்பிலுள்ள பிளவு சமதர்மக் கட்சி மட்டுமே என்று கூறமுடியாது. எடுத்துக்காட்டாக 'இராமராஜ்யத்தில்’, அதாவது தொழில் இயக்கம் ஏற்படுவதற்கு முந்திய புராணகால நிலையில் நம்பிக்கையுடையவர்கள் ஒருபுறம் உள்ளனர்; வாணிகம், தொழில் நிதி ஆகிய துறைகளைச் சார்ந்த குழு நலன்களின் ஆட்பேர்கள் உள்ளனர். வகுப்பு மனப்பான்மை யுடையவர்கள், மத மனப்பான்மையுடையவர்கள் உள்ளனர். இன்னும் மாகாண வாரியாகச் சிந்தனை செய்பவர்கள் வேறு உள்ளனர். இந்தியத் தேசிய இயக்கம் இப்பல்வேறு குழுக்கள் இணைந்ததே. இவர்கள் அனைவரும் தனித்தனி வேறுபட்ட நோக்கங்களும் அவாவும் உடையவர்களாயினும் இவர்களில் பெரும்பாலாரும் பிரிட்டிஷ் செல்வாக்கை வேருடன் அழித் தொழிப்பதில் ஒன்றுபட்டவராகவே யுள்ளனர்.

சமதர்மச் சார்பில் தற்காலிகமான இக்காரணங்களைத் தவிர வேறு நல்ல காரணங்களும் உண்டு. சமதர்மத்தின் குரல் முதன்மையாகப் பொதுமக்கள் நலங்களின் சார்பானது. 'இந்தியா' என்பது இப்பொதுமக்களையே - குடியானவர், தொழிலாளிகள், நடுத்தர வகுப்பினர், சிறு கைத் தொழிலாளர்கள், அறிவூழியர்கள் ஆகிய பல்கோடி மக்களையே. இந்தியாவின் மிகப் பெரும் பான்மையினர் கருத்து என்பது பொதுமக்கள் கருத்தே. பெரும் பான்மை நலன்களும் பொதுமக்கள் நலன்களே. சமதர்மிகள்