பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

அப்பாத்துரையம் - 46

விடுதலைபெற்றிருந்த தென்று கூற முடியுமா? எடுத்துக் காட்டாக, இன்று நாம் காண்பதென்ன? இதுவும் பெயரளவான விடுதலை மட்டுமே. அரசியலரங்கங்கள் யாவுமே இன்று இந்தியர் கையில்தான். படைத் துறைகள்கூட இந்தியமயமாக்க ப்பட்டுவிட்டது. ஆயினும் நம் ஆட்சியில் யாவருக்கும் உண்மை ஆற்றல், திறம் படைத்த ஆற்றல் உண்டா? இல்லை. ஏனெனில் அதிகாரமாற்றம் என்பது ஏற்பட்டு விட்டதாயினும், இன்றும் இந்தியக் கூட்டுறவு என்றும் பாகிஸ்தான் என்றும் இந்தியா பிரிக்கப்பட்டு நாம் பலவீன மடைந்துள்ளோம். அத்துடன் நிதி உதவி உட்பட மிகப்பல செய்திகளிலும் நாம் இன்னும் வெளிநாட்டார் உதவியைச் சார்ந்தே நிற்கிறோம். ஒரு தனிநாடு என்ற முறையில் நாம் உதவியற்ற நிலையிலேயே இருக்கிறோம். முழுநிறை விடுதலை (பூரண சுதந்திரம்) என்ற நம் குறிக்கோளைக் கைவிட்டு, நம் இன்ப வகுப்பினர், சிறப்பாக நம் தேசியத் தலைவர்குழு, பிரிட்டனிடத்திலிருந்து கிடைப்பதைச் சுருட்டிக்கொள்ளுவதற்காகக் காட்டிய அவசர புத்தியின்

விளைவுதான் இவையனைத்தும்!

வினா (58): நீங்கள் கூறுவதன் பொருள், இப்போது இந்திய இன்ப வகுப்பு ஒரு பகைச் சக்தி என்று கருதப்படத்தக்கது என்பதா?

விடை : அப்படியே கட்டாயம் கொள்ள வேண்டுமென் றில்லை. ஆயினும் தேசிய வாழ்வில் அவர்கள் முக்கியத்துவம் குறைந்து கொண்டுதான் வருகிறது. எப் பக்கம் திரும்புவதென அவர்களும் தயக்க மடைந்த நிலையிலேயே உள்ளனர். அவர்கள் தற்போதைய ஆட்சியில் மனச்சலிப்படைந்தே யிருக்கின்றனர். இன்றைய அரசியலமைப்பின் பலவீனத்தையும் அவர்கள் உணர்ந்தேயிருக்கின்றனர். ஏனெனில் வெளிநாட்டு முதலாளித் துவம் இன்னும் பெரும்பங்கு ஆதிக்கம் வகிக்கவே செய்கின்றது. இன்றைய ஆட்சி அதற்கெதிராக வலிவுடன் செயலாற்றவும் முடியவில்லை. ஆனால் அதே சமயம் சமதர்மத்தைப் பற்றியும் அது வருங்காலத்தில் என்ன சாதித்து விடுமோ என்பது பற்றியும் அவர்கள் அச்சங் கொண்டுள்ளனர். இங்ஙனம் அவர்கள் இருதலைக் கொள்ளி யிடைப்பட்ட எறும்பு நிலையிலுள்ளனர். இது இந்தியக் கூட்டுறவின் நிலைமட்டுமன்று. பாகிஸ்தானி லுள்ள நிலையும் இதுதான். உண்மையில் பாகிஸ்தான் ஒரு