பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

93

தனியரசியலானதே மிக நொய்மைவாய்ந்த காரணத்தினால் அதாவது வகுப்பு வாதத்தினால்! எனவே அது தனித் தன்மையுடன் இயங்கும் ஆற்றலுடையது என்பது பெரிதும் ஐயப்படத் தக்கதேயாகும். பொது முறையில் இந்தியா முழுவதையும் ஒன்றாக நடத்துவதே இயல்பும் எளிதும் ஆகும். இந்தியக் கூட்டுறவின் காரியங்களையும் பாகிஸ்தானின் காரியங் களையும் தனித்தனி கவனிப்பதென்பது அவ்வளவு எளிதும் இயல்பும் அல்ல.

வினா (59)அப்படியானால் இந்திய அரசியலியக்கத்திலும் வகுப்பு நலன்களில்லாமலில்லை என்றும், அது உண்மையில் தேசிய இயக்க மல்ல, அதாவது வகுப்பு நலன்களுக்கப்பாற்பட்ட இயக்கமல்ல என்று தான் நீங்கள் கருதுகிறீர்களா?

விடை : உலகில் அரசியல், சமூக இயல், பொருளியல் சார்ந்த எந்த இயக்கத்திலுமே வகுப்புநல அடிப்படையில்லாம லில்லை. இந்திய இயக்கமும் இதற்கு விலக்கன்று. இந்திய மக்கள் சமூகத்தில் குடியானவர் வகுப்பு, உழைப்பாளி வகுப்பு, சிறு தொழிலாளர் வகுப்பு, தொழில் முதலாளிகள் வகுப்பு, நிதி நிலை வகுப்பு, வணிக வகுப்பு, பெருநிலக்கிழவர் (ஜமீன்தார்) வகுப்பு, சிறுநிலக் கிழவர் வகுப்பு ஆகியவை மட்டுமன்றி, மறக்க முடியாத மற்றொரு வகுப்பான திபத்திய வகுப்பும் அதன் ஆதரவாளர்களும், அதன் ஆட்பேர்களான நாட்டு மன்னரும் த்தனை வகுப்புக்களும் உண்டு என்பதை மேலே கண்டோம். இவையனைத்திற்கும் அவரவர் தனி நோக்கு உண்டு; அவர்கள் அவரவர் தனிவழிகளையும் வகுத்துள்ளனர்.

ஆகிய

வினா (60) ஆகஸ்டு 15 இவையனைத்தையும் மாற்றி யமைத்து விட்ட தென்பதையும் ஏகாதிபத்தியம் ஒழிந்து மறைந்து போயிற் றென்பதையும் நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லையா?

விடை: நேரடியான ஏகாதிபத்திய ஆட்சி ஒழிந்துவிட்டது என்பதில் ஐயமேயில்லை. ஆயினும் நாட்டு வாழ்வில் அது ன்னும் மிகப்பெரும்படியான செல்வாக்குடையதாகவே இருக்கிறது. பிரிட்டனின் துணை சார்ந்து நிற்பது தவிர வேறு வழியற்ற நிலையிலேயே இந்தியா விட்டு வைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்களே காணலாம். இந்தியாவின் வசம் (அதாவது இந்தியாவின் வசமும் பாகிஸ்தான் வசமும்) உள்ள படை வலிமை