பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

95

முடையவையாயும் அடிக்கடி அவற்றை எதிர்ப்பவையாகவுமே இருக்கின்றன. முடிவாக அவை எந் நிலைகொள்ளும் என்பதை எதிர்காலம்தான் காட்ட வேண்டும். எனினும் இதுவரை அவை ஆற்றிய பங்கைத் தெரிந்து கொள்ளுதல் நலம். அப்போதுதான் இனி ஆற்றும் பணியின் போக்கு விளங்கும்.

பெருநிலக்கிழவரும் நாட்டுமன்னரும் பிரிட்டிஷ் ஆதிக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்களாய்த் தம் வாழ்விற்கே அதனைச் சார்ந்து வந்துள்ளனர். மேலும் இவை பிரிட்டிஷாரால் படைக்கப்பட்ட வகுப்புக்கள் ஆகும். தனி வகுப்புக்கள் என்ற முறையில் இவை தப்பித் தவறிக்கூட விடுதலைச் சக்திகளுடன் கலந்துகொண்டதில்லை. நேர்மாறாக எப்போதுமே விடுதலைச் சக்திகளை எதிர்த்து பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு உண்மையில் உதவியுள்ளனர். மக்கள் இயக்கத்துக் கெதிராகப் பிரிட்டிஷார் அவசரச் சட்டங்களைப் பிறப்பித்த போதெல்லாம், இந்திய மன்னர் தம் பகுதிகளிலும் அவற்றைத் தவறாது பார்த்துப் பகர்ப்புச் செய்துவந்தனர். பிரிட்டன் போரறிவிப்புச் செய்தபோது, மக்கள் போக்கு எப்படி யிருந்த போதிலும் சரி, அவர்கள் போர்முயற்சிக்கு ஆதரவாகவே இருந்தார்கள். பெருநிலக்கிழவர் நிலையும் இதுவே. தேசிய எழுச்சியின் வேகத்தில் சில தனிப்பட்டவர்கள் கலந்து கொண்டதுண்டாயினும், ஒரு வகுப்பு என்ற முறையில் இவர்கள் தம் குழுநலன்களுக்கு மாறாக என்றும் நடந்துகொண்டதில்லை.

ஏகாதிபத்திய, பொருளியல் அமைப்புமுறையின் வரம்புக்குப் புறம்பாகத் தோன்றிய வேறு வகுப்புக்கள் சில. தொழில் முதலாளிகளின் இன்பவகுப்பு இவற்றுள் ஒன்று. இவ் வகுப்பு பிரிட்டிஷ் தனிக் குழுநலன்களின் எதிர்ப்பு மீறிப் பிறந்தது. அவற்றின் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படியிலும் பிரிட்டிஷ் தனிநலன் அவற்றின் மீது சீற்றமும் பகையும் காட்டி அவற்றின் வளர்ச்சிப் பாதையில் முட்டுக்கட்டைகளிட்டது.இவற்றினிடையே இந்தியாவில் எழுந்த முதல் தொழில் ஆடைத்தொழிலேயாகும். லங்காஷயரால் இந்தியாவின் தேவைகள் முழுவதையும் நிறைவுபடுத்தவும் முடியவில்லை. நிறைவுபடுத்த முடிந்த அளவிலும் விலைகுறைந்த ஆடைவகைகளைச் செய்வதில் குறைந்த ஆதாயமே வரும் என்று கண்டனர். இத்துண்டுத்