பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

அப்பாத்துரையம் - 46

உற்பத்தியளவு உடனடியாகப் பெருக்க மடைய வேண்டும் என்பதே. அதாவது நம் தொழில்சக்தியளவு மிகுதியாக வேண்டும். நம் முதலாளிகள் இதனைச் செய்ய முடியுமா? அதற்கு வேண்டிய நிதி இருக்கலாம்; வகைதுறை உண்டா? ஆகவே அவர்கள் வெளிநாட்டு உதவி பெற்றாக வேண்டும். இதற்காக வெளிநாட்டார் நலன்களைத் தழுவியாதரிக்கவும் வேண்டும். ஆனால் வெளிநாட்டு முதலீடு இந்தியாவுக்கு வரும் அளவுக்கு உள்நாட்டு முதலீட்டுக்குப் பாதகம் ஏற்படும். இந்திய முதலீடு குறைவாகவும் பிரிட்டிஷ் முதலீடே முக்கியமாகவும் கொண்டு பல இந்தியத் தொழிலகங்கள் கூட்டு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

எப்படியும் உலகமெங்குமே முதலாளித்துவம் தன் ஆட்டம் ஆடித்தீர்ந்து விட்டது. முதலீட்டுச் சரக்குகளில் பயங்கரமான அளவு முட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே மேற்கூறிய முறையிலும் கூடப் பலன் ஏற்படுவது அரிது. இதன் மொத்த விளைவு யாதெனில், முதலாளித்துவம் தனிப்பட நின்று இந்தியத் தொழிலியக்கத்தை விரைவுபடுத்தவே முடியாது. அவர்கள் உச்ச அளவில் செய்ய முடிவதெல்லாம் பிழைக்கு மட்டும் பிழைக்கப் பார்ப்பதுதான். அவர்கள் தங்கள் எதிர்கால நலனை மக்கள் நலனுடன் ஒன்றுபடுத்திப் புதிய தொழில்களில் உற்பத்திச் சாதனங்களைச் சமூக உரிமையாக்கினார்களென்று வைத்துக் கொள்வோம். அப்போதும் அவர்கள் தங்கள் கல்லறைக்குத் தாங்களே குழி பறித்துக் கொண்டவர்கள் ஆவார்கள். இப்போதாவது அவர்கள் இரக்கப் படத்தக்க நிலையை நீங்கள் காணலாம். அவர்கள் சார்பில் உங்கள் கேள்விக்கு நேரிய விடையளிக்க நான் தயங்கிய தயக்கமும் உங்களக்கு இப்போது புரியலாம்.

யாது?

வினா (66) நிதித்துறையாளர் முதலிய பிற வகுப்பினர்கள் நிலை

விடை: எல்லா நாட்டிலும் போலவே இங்கும் நிதித்துறை யாளர் ஒரு பழங்காலத்து வகுப்பினர். மிக மிக முதன்மையாகச் சுரண்டலிலேயே பழகிய வகுப்பும்கூட பழங்காலத்தில் அவர்கள் தனியாட்களுக்கும் வகுப்புக்களுக்கும் மன்னர்களுக்கும் பணங் கொடுத்துதவினர். ஆயினும் பிரிட்டிஷ் வரவின்பின்