பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 46

102 || ஏனெனில் இவர்கள் உண்மையில் முதிர்ச்சிபெற முடியாத தொழில் துறை வகுப்பினரே. சாதகமான வகை துறைகள் இல்லாத காரணத்தாலேயே அவர்கள் தொழில்துறை யாளராகா திருக்கின்றனர்.

அடுத்த வகுப்பு உழைப்பு வகுப்பு ஆகும். இது தொழிற் சாலைத் தொழிலாளி, அணுக்க ஊழியர் (mental workers) சிறு தொழிலாளர், திறமை யற்ற உழைப்பாளி ஆகியவர்களடங்கியது. நம் தொழில் மிகுதி வளர்ச்சியடையாத நிலையில், தொழில் இயந்திர உழைப்பு வகுப்பு மிகச் சிறியதே மக்கள் தொகையில் இது 100-க்கு 2 விழுக்காடு அளவானதே. இவர்களும் முக்கியமாக ஆடை, சணல், இரும்பு, அச்சுவார்ப்பு, பழுதுபார்த்தல், சுரங்கம், போக்குவரவு ஆகிய தொழில்களையே சார்ந்துள்ளனர். இவர்களிலும் திறம்பெற்ற தொழிலாளர் அதாவது இயந்திரங் களைக் கையாள வல்லவர் இன்னும் மிகமிகக் குறைவே. இவர்களிலும் பெரும்பாலோர் உற்பத்தித் தொழிலிலீடுபட்ட வரல்லர்; புகைவண்டிப் பாதைகள், வாணிகக் கப்பல்கள் ஆகியவற்றிலும் அணிமையில் உந்து வண்டிகளிலும் ஈடுபட்டவர்கள் இன்னும் பலர் கொள்கை யளவிலேயே தொழிற்சாலை வேலையாட்கள். இவர்களே பீடித் தொழிலாளி, சிப்பங் கட்டுபவர், தட்டுமுட்டுச் சாமான் செய்பவர், தாள் பை செய்பவர் ஆகியவர்கள். இவர்கள் தொழில்செய்யும் சாலைகளில் வேலைபார்ப்பவராயினும் இயந்திரங்களில் வேலைசெய்பவரல்லர். இவர்களன்றிப் புள்ளி விவரக் கணக்கில் வராத வீட்டுவேலையாட்கள், பாத்திரம் துலக்குபவர்கள், பெருக்குபவர்கள், நகரவை ஊ ஊழியர் முதலிய வகையினர்

உள்ளனர்.

50

இந்தியாவில் சிறுதொழிலாளர் வகுப்பே முற்காலங்களில் நாட்டின் முதுகெலும்பாயிருந்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்வரை இவர்களே நாட்டுமக்களில் 100-க்கு பேராயிருந்தனர். இவ் வகுப்பினர் இப்போது தொழிலிலிருந்து துரத்தப்பட்டு உழவுத் தொழிலுக்கே செல்ல நேர்ந்தது. இதனால் உழவுத்தொழிலில் பெருத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவ்வகுப்பு சில இடங்களில் இன்னும் பிழைத்திருக்கிறதாயினும் தொழில்களில் துணை வேலையாட்களாகவும், வேலைகளில்