பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104 ||

அப்பாத்துரையம் - 46

உழவர் மீது மிகுதிப்படிச் சுமை ஏற்படுவதில்லை. பரிசிலன் அவ்வூர் அல்லது ஊர்களிலிருந்து பெற்றது, அவை முன்பு அரசனுக்குக் கொடுத்த அதே வரிப்பணத்தை மட்டுமே. மன்னன் யாராயிருந்தாலும் சரி, அவன் மரபு யாதாயினும் சரி, இந்தியாவின் அடிப்படை ஊர்த்திற ஆட்சி முறையில் அவன் எவ்வகை மாறுதலும் ஏற்படுத்தியதில்லை.

பிரிட்டிஷார்

டிஷார் இம்முறையைத் தலைகீழாக்கினார்கள். அவர்கள் மேன்மேலும் நாட்டுப் பகுதிகளைப் பிடிக்குந்தோறும் ஊர்களிலிருந்து வரிகளைப் பிரித்து அனுப்பப் போதிய ஆட்சிப் பணியாளர் தம்மிட மில்லை என்பதை உணர்ந்தனர். ஆகவே அவர்கள் சில முதலாளிகள் அல்லது பெருநிலக் கிழவர்களை ஏற்படுத்தி அவர்களிடம் பத்து, நூறு, சில சமயம் ஆயிரக் கணக்கான ஊர்களை விட்டனர். ஊர்களிலுள்ள நிலங்களின் உடைமையுரிமை அவர்களுக்குத் தரப்பட்டது. அவற்றிலிருந்து அவர்கள் விரும்பிய எந்த அளவு வரியையும் பெறும் உரிமையும் இத்துடன் அவர்கட்குக் கிடைத்தது. ஆனால் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கழகத்தாருக்கு அவர்கள் கொடுக்கவேண்டும் தொகை வரையறுக்கப்பட்டது. இந்திய உழவர் வகுப்பிற்குள் இது இங்ஙனம் ஒரு புதிய வகுப்பைப் படைத்தது. இதன் பொருளியல் தாக்கு எதிர்தாக்குப் பேரளவாயிருந்தது. இவ் வகுப்பு நிலத்தி லிருந்து கூடிய மட்டும் மிகுதி அளவான பொருள் பெறுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. உழவுத் தொழிலுக்கு என்ன நேருகிறது என்பது பற்றிய கவலை அவர்களுக்குக் குறைவே.மேலும் முன்பு நிலத்துக்கு உரிமையுடையவர்கள் இப்போது குடியுரிமையாளராயினர். மற்றும் சில உரிமையாளர் இப்போது கூலிக்கு உழைப்பவர் ஆயினர். பெருநிலக் கிழவர் பெரும்பாலும் தாமே உழவராயில்லாதிருந்தவராதலால், உழவுத் தொழில் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. இத்துடன் உழவர் படிப்படியாக அடிமை நிலையுடையவரானதால் உழவுத்தொழில் சீர்கேட டைந்தது.நம் நாட்டு உழவுத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள தீங்குகளில் மிகப் பெரியதொரு தீங்கு பெருநிலக்கிழமை முறையே ஆகும்.

இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு பாதிப் பகுதியில் பெருநிலக்கிழமை முறை இன்னும் இருக்கிறது. மற்ற பாதியில், சிறப்பாகத் தென்னாட்டில், சிறு தனிக்கிழமை (ரயத்துவாரி