பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

அப்பாத்துரையம் - 46

தொழிலிலீடுபட்ட மக்கள் தொகை தொடர்ந்து பெருக்க மடைந்து வந்து இன்று இந்தியாவின் நாட்டுப்புறம் உலகில் வறுமைக்கான முதல்தர எடுத்துக் காட்டாய்விட்டது. இந்தியாவில் புள்ளிவிவரக் கணக்குகள் விரும்பத்தக்க அளவில் இல்லாது போயினும் உழவையே சார்ந்துள்ள மக்கள் நூற்றுக்கு இத்தனை விழுக்காடு என்று காட்டும் கீழ்க்கண்ட புள்ளிகள் நிலைமையின் போக்கை உணர்த்தும்.

1881 -

""

1891-

1911 -

1921 -

1931-

1941 -

(நூற்றுக்கு)

51

66.5

""

722

""

73

""

65.6

(விவரம் கிட்டவில்லை)

1931-இல் கண்ட குறைபாடுகூட உண்மையில் போலியே. ஏ னெனில் பயிர்த்தொழில் வகுப்பினர் பற்றிய தவறான பாகுபாட்டின்பேரின் அது கணக்கிடப்பட்டுள்ளது. மக்கள் அண்மைக்காலங்களில் ஊர்ப்புறங்களிலிருந்து நகரங்களுக்கும் பட்டணங்களுக்கும் சென்று வந்துள்ள நிலையிலும்கூட நூற்றுக்கு 75 விழுக்காடு மக்கள் இன்னும் தங்கள் வாழ்க்கைக்கு நிலத்தையே சார்ந்துள்ளனர். ஆகவே இந்திய உழவுத் தொழிலின் அழிவும் உழவு வகுப்பினரின் சீர்கேடும் நேரடியாகப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் விளைவுகளேயாகும். அத்துடன் நில உடைமை முறையில் அவர்கள் செய்த தலைகீழான மாறுபாடு இன்னும் நடை முறையில் மாற்ற முடியாத கண்கலங்க வைக்கும் நிலையாகவே இருக்கிறது.

பேரளவில் இந்திய சமூகத்திலுள்ள வகுப்புக்கள் இவை. இவற்றுள் பிரிட்டிஷ் ஆட்சியால் நலம்பெற்ற வகுப்புக்கள் சில. மற்றவை அதனால் பாதகமடைந்து இன்னலுற்றவை. ஒவ்வொரு அரசியல் இயக்கத்திலும் சில வகுப்புக்கள் தனித்தனியே நின்றும் சேர்ந்தும் பங்கு கொள்கின்றன வாயினும் தத்தம் வகுப்பு நலனைக் குறியாகக் கொண்டே செயல், எதிர்ச்செயலாற்று கின்றன. இந்தியாவின் அரசியல் இயக்கம் இவ்வகையில் அடிப்படை