பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(110) || – – –

அப்பாத்துரையம் - 46

தனிப்பட்ட புகைவண்டிப் பாதைகள் முக்கியமாக இந்திய மூலப்பொருள்களைப் பிரிட்டனுக்கு அனுப்புவதற்காகவும் இரண்டாவதாக நாட்டுப் பாதுகாப்புக்கான தள இணைப்புச் செய்வதற்காகவும் ஏற்பட்டன. ஆனால் போக்குவரவு பெருகப் பெருக அவை வாணிக முறையிலும் ஆதாயம் தரும் தொழில் முதலீடுகள் ஆயின. இதற்கான முதலீடு இங்கிலாந்தில் திரட்டப் பட்டது. அதில் நல்ல அளவு ஆதாயப் பங்கும் கிடைத்தது. அத்துடன் எப்படியும் ஒரு குறைந்த எல்லை ஆதாயப் பங்கும் அரசியலால் உறுதி கூறப்பட்டது. இங்ஙனம் பிரிட்டிஷ் முதலீட்டாளருக்கு அது இன்னலற்ற பாதுகாப்பான முதலீட்டுக் களமாயமைந்தது. நூறு ஆண்டுகளுக்குப் பின் புகைவண்டிப் பாதைகளனைத்தும் அரசியலுக்குரிய அனைத்தும் ஆகும் என்று திட்டம் செய்யப்பட்டிருந்தது. இப்பொழுது இந்தியப் புகைவண்டிப் பாதைகள் பலவும் அரசியலுக் குரியவையாகி விட்டன.

இந்திய அரசியல் புகைவண்டித் துறையின் விளம்பரங்களை நீங்கள் அடிக்கடி கவனித்திருக்கலாம். உலகின் சுற்றளவைப்போல் மூன்றுமடங்கு நீளமுள்ள புகைவண்டிப் பாதைகள் நாட்டில் உள்ளன என அவை குறிப்பிடுகின்றன. இது அத்துறையின் முயற்சி எவ்வளவு பிரமாண்ட அளவினது என்பதைக் காட்டுவதற் காகவே. ஆனால் உண்மையில் நாட்டின் பரப்பளவை நோக்கப் புகைவண்டிப் பாதைகள் எத்தனையோ மடங்கு போதாதவையே யாகும். இங்கிலாந்தில் ஒவ்வொரு 100 சதுர மைல் பரப்புக்கும் 20 மைல் புகைவண்டிப் பாதைகள் உண்டு.ஃபிரான்சில் இது 12 மைல்; அமெரிக்காவில் 8 மைல்; ஆனால் இந்தியாவிலோ 2 மைல்தான். இந்தியாவில் மக்கள் புகைவண்டி நிலையத்துக்குப் போக மைல் கணக்கில் நடக்க வேண்டும். புகைவண்டியிலேறவோ மணிக் கணக்காக, நாள் கணக்காகக் காத்திருக்க வேண்டும்.புகைவண்டிப் பாதைகளிலிருந்து கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதி சரக்குக் கட்டணம். இதன் கட்ட ண வீதம் மிகமிக உயர்வுடையது. இந்திய வாணிகத்துக்கும் தொழிலுக்கும் இது பெருத்த பளுவும் தடைக்கல்லும் ஆகும். வருவாயின் இன்னொரு பெரும்பகுதி மூன்றாம் வகுப்பு வழிப்போக்க ருடையது. அவர்களுக்குச் செய்யப்படும் வசதிகளோ இரங்கத்தக்க நிலையுடையவை. உண்மையில் மூன்றாம் வகுப்புக்குச் செய்யப்படும் வசதி என்று