பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(114) || — — — ---

அப்பாத்துரையம் - 46

ஆராயப்படும் பொருள் புகைவண்டித்துறை பற்றியதாத லால் கூடியமட்டும் அதன் எல்லைக்குட்பட்டே இவ்விளக்கம் தரப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவே தொழில்வகையில் சமதர்மத்தின் நோக்கையும் விளக்குகிறது. தொழில்கள் அனைத்துக்குமே உடைமையுரிமையும் நடைமுறையும் இதுபோன்றதா யிருந்துவரும்.

முடிவாக: ஒவ்வொரு தொழில் முயற்சியும் சமூகத்தின் முழுநிறை நலத்தைக் குறியாகக்கொண்டு நடத்தப்படும். (இதனைச் சாதிப்பதற்காகவே சமதர்மம் தனிப்பட்டவர் ஆதிக்கத்தினிடமாகச் சமூக ஆதிக்கத்தை உண்டு பண்ணி அதன்மூலம் உற்பத்திச் சாதனங்களைப் பொது உடைமை யாக்குகின்றது.) இரண்டாவதாக இந் நடைமுறை மக்களின் தேவைகளுக்கான உற்பத்தித் திட்டமிடுமேயன்றி ஆதாயப் பித்தையே குறிக்கோளாகக் கொண்டிராது. மூன்றாவதாக, இச்செயலிலீடுபட்டவர்களுக்கு அவர்கள் உழைப்புக்கான போதிய ஊதியமும், அத்துடன் அதனை நடத்தும் பொறுப்பில் ஒரு இடமும் தரப்படும். கடைசியாக ஒவ்வொரு தொழில் முயற்சியும் நாட்டின் பொதுத்தொழில் திட்டத்தில் பொருத்தப் படுவதனால் அது மற்றவற்றுக்கு நிறைவு தருவதாயிருக்குமே யல்லாது எவற்றுக்கும் போட்டியாயிராது.

வினா (70) : புகைவண்டி நிறுவனங்கள் தேசியமயமாக்கப்படுவது நல்லது என்று நீங்கள் கருதவில்லையா?

ஆயின்

விடை : சமதர்ம மயமாக்கப்படுதலே அதனினும் சிறந்த தென்று நான் கூறுவேன். இந்தியப் புகைவண்டி நிறுவனங்களில் பெரும்பாலானவை ஏற்கெனவே தேசியமயமாக்கப்பட்டு விட்டன. தனால் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? தேசியமயம் என்பதன் பொருள் அரசியல் உடைமை என்பது. அரசியலுடைமையின் தன்மை எவ்வகுப்பு அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைப் பொறுத்தது. ஏகாதிபத்திய வகுப்பினர் ஆதிக்கத்திலிருந்தபொழுது அவர்கள் புகைவண்டி நிறுவனங்களைத் தம் நலனுக்குப் பயன்படுத்தினர். அவர்கள் ஆட்சி, ஊழியர்களுக்கும் அதிருப்தி தந்தது. பயணம் செய்வோருக்கும் அதிருப்தி தந்தது. இப்போது முதலாளிகள் அரசியலை இயக்குகிறார்கள். பல முன்னேற்றங்கள் செய்வதாக