பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




116

||--

டி.

அப்பாத்துரையம் - 46

கிடைக்காமல், உழவனுக்கும் போதிய அளவு கிடைக்காமல் இருப்பானேன்? இதன் காரணம் யாதெனில் நிலம் இவ்விரு சாராரும் நீங்கலாக மூன்றாம் பேர்வழிகளை அதாவது நில முதலாளியையும் வட்டிக்கடைக்காரனையும் (சௌக்கார்) தாங்க வேண்டியிருக்கிறது. இவ்விரு வகுப்பினரும் உழவன் நலத்தின் மீதாகவும், நிலத்தின் மீதாகவும் ஈட்டி மிகக்கொழுத்த வாழ்க்கை நடாத்துகின்றனர். ஆனால் இவர்கள் தங்கள் தேவைகளையே தடையாணியாக்கிவைத்துப் பயிர்த் தொழிலின் வளர்ச்சியைத் தடைப்படுத்திக் குறுக்குகின்றனர். அறுவடையாகிப் பயிர் விளைவை விற்றதும் உழவன் முதன் முதலில் நில முதலாளிக்கு இறையிறுத்து அதன்பின் வட்டிக்கடைக்காரனுக்குக் கொட்டிக்கொடுத்து இவற்றின் பிறகே விதைகளைப் பற்றியும், பயிரைப் பற்றியும், எருதுகளைப் பற்றியும் இறுதியில் தன்னைப் பற்றியும் எண்ண முடிகிறது. இந்நிலையில் பயிர் தொழில் வளமுறுவது எவ்வாறு? ஆகவே உழவுத் தொழில் துறையின் மிக மிக முதன்மையான தேவை நிலத்தின் மீதுள்ள நில முதலாளித்துவத்தின் தாங்கமுடியாச் சுமையையும் அநீதக் கடன் சுமையையும் அகற்றி அதனை அரசியலின் உடைமைக்குக் கொண்டு வருவதேயாம். உழுபவன் மட்டுமே அதனைப் பயன்படுத்தும் உரிமை பெறவேண்டும். சமதர்மத்தின்கீழ் நில முழுவதும் அரசியலுக்கு உரியதாயினும் உழவன் ஒரு கீழ்க் குடியானவனாய் இருக்காமல் சமூகத்தின் ஒரு உறுப்பினனாகவே இருப்பானாதலால் அவன் உண்மையில் அதன் உடையவனாகவே இருப்பான் என்பது இங்கே நினைவில் வைக்கத்தக்கது. அவன் விளைவிப்பது அவனுக்கு உரியதாகும். அதன் ஒரு பகுதி மட்டுமே அரசியலுக்குச் செல்லும். அப்பகுதிக்கும் ஈடாக அவனுக்குப் பயிர்த் தொழில் கருவிகளின் உபயோகம், உரம், கடனுதவி, வாணிகக்கள வசதிகள், பாசன வசதிகள், புகைவண்டி, மற்றப் போக்குவரவுப் பாதை வசதிகள் ஆகிய பல நல உதவிகள் கிடைக்கும். நில முதலாளித்துவத்தின் கீழ்ப்பட்ட குடியானவனும் தன் வருவாயில் ஒரு பகுதியைக் கொடுக்கிறான். ஆனால் அதற்கீடாக அவனுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. கிடைப்பது நிலத்தைப் பயன்படுத்தும் உரிமை மட்டுமே. அது கூட ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள்ளாகத் தான். திட்டமான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை யாயினும் இந்தியாவின் நிலங்களில்