பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




118

அப்பாத்துரையம் - 46

இவை இன்றுள்ள உற்பத்தியை விரைவுபடுத்திப் பெருக்குவதற்கான முறைகள். இதே சமயம் நிலத்தின் செழுதகைமையைப் பெருக்கி அது இழந்த உரத்தை மீட்டும் அளித்து நிலப்பண்பாட்டை வளர்க்கும் முயற்சிகளிலும் கவனம் செலுத்தப்படும். இந்தியாவில் ஆண்டுக்கு 6 மாதங்கள் நிலம் வறிதே கிடக்கின்றது. பருவமழைக் காலத்திலும் அதனைத் தொடர்ந்து இரண்டு மூன்று மாதங்களிலும் நிலத்தில் ஈரம் உலராதிருக்கின்றது.அப்போதுதான் நிலத்தில் பயிர் விளைகிறது. வேனில் அணுகியதும் பயிர்தொழில் நின்று விடுகிறது. பாசன வசதிகளின் குறைபாடே இவ்வீணான செயலற்ற தன்மைக்குக் காரணம். சமதர்ம அரசியல் அணைகள், கால்வாய்கள் கட்டுவதன் மூலம் நீர்ப்பாசன முறைகளை மேம்பாடு செய்வதற்கு முதற் சலுகை தரும். இந்தியாவைப்போல இத்தனை பேராறுகளும் சிற்றாறுகளும் நிறைய உடைய வேறுநாடு உலகில் இல்லை. பருவமழைக்காலத்தில் இங்கே மழை மிகுதி. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. இந்நீர் முழுவதும் கடலில்சென்று கலந்து விடுவதனால் அதில் பத்தில் ஒரு பகுதிகூட நிலத்தின் நன்மைக்காகச் சேமிக்கப்படுவதில்லை. அணைகள் கட்டுவதன்மூலம் இந்நீர் சேமித்து வைக்கப்பட்டு வேனிற்க ாலத்துக்குப் பயன்படுத்தப்படக் கூடும். ஆகவே, இந்தியப் பயிர்த்தொழில் மேம்படுத்தப்படவேண்டுமானால் அணை கட்டுவதற்கு முதலுரிமை தரப்படவேண்டும். அது நம் நிலத்தின் விளைவை இரட்டிப்பு மடங்காக்கும். அணைகட்டித் தடுத்த நீரைக் கால்வாய்களில் கொண்டுசெல்லக் கால்வாய்களின் பாதுகாப்புச் செலவல்லாமல் வேறு செலவு எதுவும் ஆகாது. அத்துடன் தொழிலுக்கும் வீட்டு வாழ்வுக்கும் மிக அவசியமான மலிந்த மின்சார ஆற்றலுற்பத்தி செய்வதற்கும் இவ்வணைகள் காரணமாகின்றன.

இது செய்துமுடிக்கப்பட்டதும் பயிர் விளைவின் பண்பையும் இன உயர்வையும் மேம்படுத்தும் வகையில் அரசியல் விஞ்ஞானத்தின் வண்மை முழுவதையும் கையாளும். பயிர்த் தொழில் துறையில் உலகெங்கும் எத்தனையோ புத்தாராய்ச்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றிலிருந்து உச்ச அளவு நற்பலன்கள் பெறப்படும். இன்று அரசியலின் வரிவருமானத் துறையின் உறுப்பினருக்குத் தரப்படும் உயர்ந்த சம்பளங்கள்