பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

119

அப்படியே அதே துறையிலுள்ள புத்தாராய்ச்சியாளருக்குத் தரப்படும். அதனால் நாட்டுக்கு எவ்வளவோ நலம் ஏற்படும். சுருங்கச் சொன்னால் இந்தியப் பயிர்த்தொழிலின் உள்ளார்ந்த செழித்த வளப்பத்தைக்காண அது எளிதாக ஆசியாக்

கண்டத்தின் தானியக் களஞ்சியமாகக்கூடும் என்று கூறலாம்.

இப்பிரச்சினையில் இதுவரை விளைவுத்துறை பற்றிய செய்தியையே கூறினோம். இதேபோல அதன் பரிமாற்றம் பற்றியும் ஆராயவேண்டும். ஏனெனில் இதனைச் சரிவரச் செய்யா விட்டால் எடுத்துக்கொள்ளும் முயற்சியில் பெரும்பகுதியும் வீணாகிவிடும். இன்று விலையின் சமநிலையின்மையினாலும் (உறுதியற்ற வாணிகக் கள நிலையினாலும்), போக்குவரவு வசதிக் குறைபாட்டினாலும் இந்தியப் பயிர்த்தொழில் அல்லற்படுகிறது. நாட்டுப்புற இந்தியாவில் பத்தில் ஒன்பது பகுதியில் பருவமழைக்காலத்தில் போக்குவரவு தேக்கநிலையடைகிறது. நாட்டுப் புறப் பாதைகளெல்லாம் சேறு நிரம்பப் பெறுவதனால் போக்குவரவு தேக்கமடைவதுடன் இயந்திர சாதனப் போக்குவரவு வசதிகளும் எருத்து வண்டிகளும் ஒருங்கே தடைபடுகின்றன. இதனால் வாணிக நடைமுறைக ளெல்லாமே நிலையாக நின்றுவிடுகின்றன. ஆகவே இந்தியாவில் நல்ல பாதைகளின் அவசியத்தைப் பற்றி எவ்வளவு வற்புறுத்தினாலும் மிகையாகாது.

தானியங்கள் பருவமழைக் காலத்தில் விளைபவையல்ல என்பது உண்மையே. ஆயினும் காய்கறிகளுக்கும் தோட்டப் பழங்களுக்கும் இது சிறந்த காலமே. இவற்றுக்கு நாடெங்கும் நல்ல தேவையும் இருக்கிறது. மேலும் காய்கறிகளில் விளைவு மிகுதியாய்விட்டால்கூட அதனை ஈரமுலர்த்தல் முறைகளின் பதனம் செய்து வைத்துக்கொள்ள முடியும். எனவே இந்தியாவின் பாதைகளைச் சீர்திருத்தல் எப்படியும் நலம் செய்வதே. ஒவ்வொரு ஊருக்கும் குறைந்தது ஒரு பாதையாவது ஆண்டு முழுவதும் சரக்கேற்றி யனுப்பப் பயன்படவேண்டும்.

உழவர்களின் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் விற்பனைக் கான வசதிகள் மிகச் சிறந்த முறையில் அமைக்கப்படக்கூடும். ஒவ்வொரு ஊரும் தனக்கென ஒரு கூட்டுறவுச் சங்கம் அமைத்துத் தன் விளைவைச் சேகரித்து அதனை மிகவும் அருகாமையிலுள்ள