பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152

||– –

அப்பாத்துரையம் - 46

யடிப்படையிலோ அமைதல் கூடும். தனியுயர் சட்டமன்றத்துக்கு நேரடிப்பேராண்மையும் இருக்கலாம்; அல்லது அவ்வவ்விடத்தின் நடைமுறைகளுக்காக அமைக்கப்பட்ட மன்றங்கள் வாயிலான சுற்றுமுறைப் பேராண்மையாகவும் இருக்கலாம். இச்சட்ட மன்றங்கள் மக்கள் கருத்தை நிழற்படுத்திக் காட்ட வேண்டும் என்பதே அடிப்படையான தத்துவம். இங்ஙனம் அரசியலை நடத்தும் மக்கள் நாட்டுமக்களே யாவர். மக்கள் அரசியலை நடாத்தவும்,அரசியல் மக்களுக்கு உதவுவதையே மூல தத்துவமாகக் கொள்ளவும் செய்கின்ற இடத்தில் சர்வாதிகாரியின் பேச்சு எங்கிருந்து வரும்?

வினா (93):இயந்திர உழைப்பு வகுப்பின் சர்வாதிகாரத்தைப் பற்றிய செய்தி யாது? சமதர்மம் அது பற்றிப் பிரச்சாரம் செய்வதில்லையா?

விடை : கோட்பாட்டுக் குறிக்கோள் முறையிலன்று அத்தகைய பிரச்சாரம் செய்வது. முதலாளித்துவ வீழ்ச்சிக்கும் சமதர்ம அரசியல் முழுநிறைவுடன் தொடங்கப்படுவதற்கும் இடைப்பட்ட இடையீட்டு மாற்றக் காலத்தில் எங்கும் குழப்ப நிலைமை இருக்கக்கூடுமாதலால், ஒரு வலிமைவாய்ந்த ஆட்சி விலக்க முடியாத அவசியமாகிறது. போர்க் காலத்தில் எங்குமே வலிமையான ஆட்சி தென்படவே செய்கிறது. இச்சமயங்களில் சில வசதிகள் கட்டுப்படுத்தப்படுவதுடன் சமூக வாழ்வில் இடைஞ்சலேற்படும்படி நேருகிறது.எடுத்துக்காட்டு முறையாக, கட்டாயப் படைத்திரட்டைப் பாருங்கள். படையில் சேர்வது என்பதன் பொருள் கொலை செய்பவர் ஆதல் என்பதே. யாரும் தனை விரும்புவ தில்லை. மேலும் படைவீரன் வாழ்வு மிகவும் கடுமை வாய்ந்தது; அதில் வரும் ஊதியமும் மிகக் குறைவு. மக்கள் விருப்பத்திற்கு விடுவதானால் பெரும்பாலோர் அத்துறையில் சேரவே மாட்டார்கள். ஆயினும் போர்கள் செய்தேயாக வேண்டியவையாயுள்ளன. ஆகவே மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கட்டாயப்படுத்தி அரசியல் அவர்களைச்

சேர்க்க வேண்டியதாகிறது.

துபோலவே முதலாளித்துவ ஆட்சி முடிவுற்றபின், (இதனையே நாம் புரட்சி என்கிறோம்) சமூக வாழ்வும் அரசியலும் புதிதாக அமைக்கப்பட வேண்டும். இந்த அமைதியற்ற நிலையில்