பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பகுதி 1

சமதர்மக் கோட்பாடு

வினா (1) : சமதர்மம் என்பது என்ன?

விடை: பொதுவாகக் கூறுவதானால், சமதர்மம் என்பது மக்களனைவரையும் சரிசமமான நிலையில் வைத்து நடத்தும் ஒரு புதிய சமூகமுறை அமைப்பு. அது சமூகத்தில் வகுப்புக்களையும் சாதிகளையும் ஒழிக்க முனைகிறது. தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய அளவு வேலையைச் செய்தானபிறகு, வேலையிலிருந்து ஒதுங்கி ஓய்வுபெறும் தகுதியுடையவருக்கும் அது அத்தகைய பாதுகாப்பை நாடுகிறது.

சமதர்மக் குறிக்கோளின் ஆக்கச்சார்பான கூறு இது. அதன் எதிர்மறைக் குறிக்கோளையும் அறிந்துகொள்ளல் நலம். அதாவது இப்புதிய வாழ்க்கை நிலையை உண்டுபண்ணுவதற்காக, அதற்கு முன்பு அது எதெதனை ஒழிக்க எண்ணுகிறது என்பதை அறிய வேண்டும். எவனொருவன் உழைத்து, உழைப்பால் பொருளுற்பத்தி செய்கிறானோ, அவன் ஒருவனுக்கே சமூக நலன்கள் உரியவை என்பது சமதர்மிகள் கருத்து. எவனாவது பொருளுற்பத்திக்கு உதவாமல் பிறர் உழைப்பால் வாழ முனைவானானால், அவன் உடலமைப்பின்படி தகுதியற்றவனாய் இருந்தாலன்றி, அவனுக்குச் சமூகத்தில் எத்தகைய உரிமையும் ருக்கக் கூடாது.

விளக்கத் தெளிவு : தற்காலச் சமூகத்தில் இரு வகுப்புகள் இருக்கின்றன.

(1) முதல் வகுப்பு உற்பத்தி செய்யும் வகுப்பு. இதில் தொழிலாளிகள், உழவர், அறிவுழைப்பாளிகள், தொழில்துறை ஊழியர்கள் ஆகியவர்கள் உட்படுவர். அதாவது தன் வாழ்க்கைப் பிழைப்புக்கான ஊதியத்திற்காக வேண்டி உழைக்க வேண்டிய