பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 46

186 || புகழுடன் புகழைச் சேர்ப்பதே. இத்தகைய தியாகங்களைச் செய்த நாடு இன்னும் செய்ய இருக்கும் நாடு உலகில் புகழ் உச்சியில் நின்று உலகின் தரத்தையும் உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.

இங்கிலாந்தின் செல்வம் மிகமிகப் பெரிதே; அதன் ஆட்சிப் புகழ் அதனினும் பெரிது; ஆனால் இவற்றையும் பொய்யாக்கவல்ல கலைச் செல்வம் ஆங்கில மொழியில் உண்டு. ஷேக்ஸ்பியர் கைப்பட எழுதிய ஒரு ஹாம்லெட்' ஏட்டுக்கு இவையனைத்தும் ஈடல்ல. ஆனால், ஆங்கிலநாட்டிளைஞர் களிடம் ஷேக்ஸ்பியரின் கைப்பட எழுதிய ஹாம்லெட்' ஏட்டுச் சுவடியை ஒரு கையிலும், மீகாமன் ஓட்ஸ் இறுதியாகக் கையொப்பமிட்ட ஏட்டின் ஒரு தாளை மற்றொரு கையிலும் வைத்து, இரண்டில் எது தேர்ந்துகொள்ளத் தக்கது என்று வினவுவோமாயின், அவர்கள் ஹாம்லெட் ஏட்டைக் கூட விட்டுவிட்டு மீகாமன் ஓட்ஸின் கை ஒப்பத்தாளைத் தேர்வர் என்பது உறுதி, உறுதி, முக்காலும் உறுதி! ஷேக்ஸ்பியர் கலையினும், அவர் கலைக்கே இலக்கியமாகத்தக்க இவ்வீரச் செயல் பெரிதல்லவா? நீ ஒரு ஷேக்ஸ்பியராயிருப்பதினும் ஷேக்ஸ்பியர் கலைக்கே இலக்கியமாவது எவ்வளவோ மேலல்லவா?

நாட்டு வீரர் துறையிலிருந்து இலக்கியத் துறைக்குச் சென்றால், இதேபோன்ற வீரமும் தூய்மையும் நிறைந்த கலஹாட் பெருந்தகை போன்ற வீரர் பண்போவியம் உன் முன் காட்சியளிக்கும். கதையுலகிலும் கவிதையுலகிலும் இதனினும் சிறந்த குறிக்கோள் வீரம் காண முடியாது.

கலஹாட் பெருந்தகையிடம் இளைஞரின் புகழார்வத்தையும் வீரச் செயலார்வத்தையும் நிறைவுறக் காணலாம். ஆனால் இத்துடன் பொதுப்பட இளைஞர்களிடத்தில் காணுதற்கரிய மற்றொரு பண்பும் அவரிடம் சிறந்துள்ளது. சிற்றின்பத்திலும் சிறுதிற இன்பங்களிலும் உழலாது உள்ளத்தை உயர் குறிக்கோளில் உய்க்குந் திறத்தில், கலஹாத் எல்லா வீரருக்கும் ஓர் உயர் குறிக்கோள் விளக்கமாய்ட் திகழ்கிறார். ஆண்களின் வீரத்துடன் பெண்களின் எழிலும், நிறையும், இருவருக்கும் அரிய தூய்மையும் வாய்ந்த இத்தகைய மனித நிறைபண் போவியத்தை நாம் வாழ்க்கையில் எளிதில் காண முடியாது. அவர் வாழ்க்கை