பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

--

அப்பாத்துரையம் - 46

நிலையிலுள்ள எவனும் அவன் தானே உழைப்பவனாயினும் சரி, அல்லனாயினும் சரி, இவ்வுற்பத்தி செய்யும் வகுப்பைச் சேர்ந்தவன் ஆவான்.

(2) இரண்டாவது வகுப்பு முதலாளி வகுப்பு. உற்பத்திச் சாதனங்கள், அதாவது இயற்கையான உற்பத்திச் சாதனங்கள், மனிதனால் செய்யப்பட்ட செயற்கை உற்பத்திச் சாதனங்கள் ஆகியவற்றைச் சொந்தமாக உடையவர்கள் இவ்வகுப்பினர். செயற்கை உற்பத்திப் பொருள்களாவன: இயந்திரங்கள், நிலங்கள், காடுகள், சுரங்கங்கள் முதலியவை. இவ்வகுப்பினர் பிறரை இச்சாதனங்களை வைத்து உழைக்கும்படி செய்து, தாம் எதுவும் உழைக்காமலே பிழைப்புக்கு வழி செய்து கொள்பவர்கள் ஆவர்.

இந்நூலில் முதல் வகுப்பை உழைப்பு வகுப்பினர் என்றும் இரண்டாவது வகுப்பை முதலாளி வகுப்பினர் என்றும் கூறுவோம்.

வினா (2) : இவ்வகுப்புகளைப் பற்றி இன்னும் திட்டவட்டமாக விளக்குவீர்களா?

விடை : முதலில் தொழிற்சாலைகளில் உழைக்கும் ழைப்பாளி வகுப்பு குறிக்கப்பட வேண்டும். இவ்வகுப்பினர் இயந்திரங்களின் உதவியாலேயே உற்பத்தி செய்வதால், இவ்வகுப்பை இயந்திர உழைப்பாளி வகுப்பு (Proletariat) என்று கூறுவதே பொருத்தமாகும். இவ்வியந்திர உழைப்பாளி வகுப்பு மிகப் புதியதோர் வகுப்பு ஆகும். ஒரு நூற்றாண்டுக்குச் சற்று முற்பட்டு நடைபெற்ற தொழில்முறைப் புரட்சியின் பயனாகவே இவ்வகுப்பு தோன்றிற்று.

தற்கால (இயந்திர) முதலாளித்துவ வகுப்பும் இதனை யொத்த புது வகுப்பே ஆகும். இவ்வகுப்பினர் இயந்திரங்களை உடையவர்களாய், பிறரை அவற்றில் ஈடுபடுத்தி உழைக்கும்படி செய்கின்றனர். இயந்திரங்கள் ஏற்படு முன்பே தற்கால மாதிரியன்றி வேறுவகைப்பட்ட ஒரு முதலாளி வகுப்பு இருந்தது. உற்பத்திக்காக உழைப்பில் ஈடுபடாமல் அதற்கான விடுமுதல், அல்லது செல்வத்தை உடையவர்களே அவ்வகுப்பினர்.

செல்வம் என்பது: முன் உற்பத்தியான பொருள்களின் தொகுதி; அல்லது அதன் மதிப்புக்குச் சரியான பணம், தங்கம்,