வருங்காலத் தலைவர்கட்கு
காட்
201
மதுகை பொருள்கள், இன்ப நாட்டம் ஆகியவற்றைக் கருவியாகக் யே தீய தோழர்கள் உரமற்ற பல நற்பண்பாளர்களைப் படிப்படியாகத் தீமை அளற்றுள் ஆழ்த்திவிடுகின்றனர்.
தீயோர் தீமையை ஏற்கும் உரமற்ற பண்பு, உன்னிடம் இருத்தல் தகாது. அதேசமயம் அப்பண்பு இல்லை என்ற பெருமை உன்னிடம் இருந்துவிட்டால், அதுவே எச்சரிக்கையின்றி அவற்றுக்கு நீ இரையாகவும் உதவிடக் கூடும். தீமையைப் பழித்தே பலர் தீமைக்காளாகி யுள்ளனர். நான் நல்லன். உரமுடையவன் என்ற எண்ணத்துக்கு ஆளாகிப் பலர் தீமை யடைந்துள்ளனர்.மன உரமற்றவர் நல ஆர்வங்கள் கூடத் தீமைக்குக் காரணமாவதுண்டு. நகரத்தின் வழி நிறைவேறா நல்லெண்ணங்கள் நிறைந்தது” என்ற பழமொழி இதனாலேயே ஏற்பட்டது. தீயவற்றைக் கனவிலும் கருதாமல், அதே சமயம் தீயவற்றைத் தீயினும் அஞ்சி விழிப்பாக வும் இருந்தாலன்றி, எவனும் தீநெறியினின்று தப்ப முடியாது. ஆனால் தீமையச்சத்தினும் நல்லகாவல் தீமை இது என்ற அறிவும், நன்மையின் நெறி இது என்ற உணர்வும், நன்மை ஆர்வமுமே யாகும். நல்ல நட்பார்வம் நட்பினைத் தருவதுடன் இவற்றையும் தரும்; நட்பு இவ்வகையில் ஒரு வாழ்க்கைக் கோட்டையாய் உதவும்.
மனிதத் தகுதி இது என்று நீ உன் குறிக்கோள்களை வரையறுத்துக்கொள். இறப்பினும் நான் இதில் தவறேன் என்பது உன் வாழ்க்கை உறுதியாயிருக்கட்டும். உரைக்கும் உரைகள் யாவும் இது பற்றிய நல்லுரையாகவும், செயல்கள் யாவும் தற்கான சான்றுகளாகவும், உன் செல்வாக்கு யாவும் இக்கோட்பாடுகளைப் பரப்பும் சமயப் பரப்பாகவும் இருக்கட்டும். உன்னால் நண்பர்கள் எனக் கொள்ளப்படுபவர் என்றும் இந்நெறி பிறழாதவர்கள் என்ற உறுதி உனக்கு இருக்க வேண்டும். அவர்களும் உன்னைப்பற்றி அவ்வுறுதி கொள்ளச் செய். அப்போது உன் நண்பர் சூழல் ஒரு தனி மனிதர் சூழலாயிராது. உலகில் தீமையுடன் போராடி நன்மையை நிலை நாட்டிப் பல நாடுகளிலும் பல இனங்களிலும் பல சூழ்நிலைகளிலும் உலக நாகரிகத்தை உயர்த்தப் பாடுபடும் பல சிறு குழுக்களில் ஒரு உயர்நிலைக் குழுவாக அது இடம்பெறும். அக்குழுக்களை