பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

|---

அப்பாத்துரையம் - 46

பெற்றுக் கொண்டோ, விளைச்சலின் ஒரு பகுதி பெற்றுக் கொண்டோ உழவர்கள் உழும்படி விட்டு விடுகின்றனர்.

திறனுழைப்பாளிகள் என்பவர்கள் திறமை வேண்டிய உழைப்பிலீடுபட்டவர்கள். இவர்கள் இயந்திரங்களின் உதவியில்லாமல், ஆனால் கைக்கருவிகளின் உதவியால் தனித்தோ கும்பலாகச் சேர்ந்தோ உழைப்பவர் ஆவார்கள்.

அறிவுழைப்பாளி வகுப்பினரும் தொழில்முறை ஊழியர் வகுப்பினரும் இலக்கிய, விஞ்ஞான முயற்சிகளோ நூல்களோ அல்லது இயந்திர அமைப்பில் புதிய முறைகளோ புதிய அறிவியல் ஆராய்ச்சியோ ஆகியவை நீங்கலாக வேறு எத்தகைய பொருளும் உற்பத்தி செய்வதில்லை. ஆயினும் பொருள்களின் உற்பத்திக்கு இந்த வகுப்பினர் செய்கிற உதவி மதிப்பேறியது. மேலும் சமூக வாழ்வையும் தொழில் வாழ்வையும் கட்டியாள்வதற்கு இவ்வகுப்பே பேருதவி புரிகிறது.

உற்பத்தியான பொருள்களைப் பரப்பி வழங்குவது சமூகத்திற்கு அவசியமான மற்றொரு பணி. இதிலீடுபட்டவர்கள் வணிகர் அல்லது வர்த்தகர் ஆவர். தற்கால சமூகத்திலுள்ள வகுப்புகள் இவைகளே.

ரு

வினா (3) : வகுப்புகள் ஏன் ஒழிக்கப்பட வேண்டும்? அவைகள் சமூக முறையில் பயனுடையவையாகத்தானே தோன்றுகின்றன! அவை ஒரு புறம் செல்வமும் மறுபுறம் வறுமையும் உண்டுபண்ணுகின்றன என்று கருதுகிறீர்களானால், எப்போதும் ஒரு சிலர் பிறரைவிட திறமையும் அறிவுத்திறனும் படைத்தவர்களாயிருக்கத்தானே செய்வர்? இத்தகையோர் தங்களைவிடக் குறைப்பட்ட தோழர்களைக் காட்டிலும் எப்போதும் செல்வமிக்கவர்களாக ஆய்க்கொண்டுதானே இருப்பார்கள்? இதனை நீங்கள் கவனிக்க வேண்டாமா?

விடை : சிலர் பிறரைவிடத் திறமையுடைவர்களாயிருக்க நேருகிறது என்பது உண்மையே. முதலாளித்துவத்தின் கீழும் சரி, சமதர்மத்தின் கீழும் சரி, அவர்களுக்கு மிகுதி ஊதியம் கிடைக்கவே செய்யும். ஆனால் சமதர்மத்தின் கீழ் அவர்கள் மிகுதிபெறுவது அவர்கள் உரிமைப்படிக்கும், முதலாளித்துவத்தின் கீழ் கிடைப்பது தற்செயலாகவும் ஆகும். எனினும் சமதர்ம அமைப்பு வளர்ச்சியுற்று ஒரு தொலைப்பட்ட எல்லைக்கு வந்தபின் எவருமே பிறரைவிட மிகுதி நலன்களைக் கோர விரும்பாதபடி பொதுவாழ்வு அத்தனை செல்வவளமுடைய