216
---
அப்பாத்துரையம் - 46
படைத்துறை ஒருவனுக்கு, ஒரு குழுவுக்கு ஒற்றுமை, கீழ்ப்படிதல், ஒழுங்காட்சி ஆகியவற்றைக் கற்பிக்குமென்றனர். ஆனால் இப்படைத்துறையின் ஒற்றுமை உயிரற்ற கட்டுப்பாட்டு ஒற்றுமை; அடிமைத்தனம் அச்சம் பேணும் ஒற்றுமை; அன்புநெறி ஒற்றுமை, சமத்துவ ஒற்றுமை அன்று வாணிகமோ ஆதாயம் என்ற இனிய நோக்கை மட்டும் காட்டி, அதன் வாயிலாகவே வகுப்பு ஒற்றுமை, சமய ஒற்றுமை, கருத்து வேறுபாடற்ற தன்மை, ஒப்புரவு நெறி, நய நாகரிக நடத்தை, முன்னறிவு ஆராய்ச்சி, துணிவு, பொறுப்பு, குறித்தகாலம் தவறாமை ஆகிய பல நல்ல பண்புகளை வளர்க்கிறது.
நீ வாணிகத்துறையில் முனைவராக வரக் கனவு காண்கிறாய். மிக நன்று. உன் கனவால் அத்துறையை நீ உயர்த்தலாம். ஆனால் அத்துறையில் அப்பணிக்கு மட்டும் நீ உன்னைத் தகுதி செய்து கொண்டால் போதாது. நீ ஆட்சி செய்யும் துறையில் மிகத் தாழ்ந்த முதற்படி முதல் இறுதிப்படி வரை யாவற்றிலும் நீ தகுதி பெற வேண்டும். அவ்வத் துறையின் முதற்படியிலுள்ளவன் அறிவதை நீ அறியாமலிருந்துவிடக் கூடாது.உலகில் முதல்நிலை பெற்ற பலர் தம் துறையில் மேல்தரப் படிக்குக் குதித்து வந்தவர்களும் அல்லர்; இடைப்பகுதியில் தொடங்கியவர்களும் அல்ல; கீழ்க் கோடியி லிருந்து முனைந்து சென்றவரே முனைவர் ஆகியுள்ளனர் என்பதை நீ காணலாம். அத்துடன் எப்படியினரையும், எத்துறையினரையும், எப் புதிய கொள்கை உடையவரையும் புறக்கணிக்காத பண்பு உன்னிடம் இருக்க வேண்டும். உலகெலாம் வெல்ல இருந்த கிட்டத்தட்ட வென்ற நெப்போலியனிடம் ராபர்ட் ஃவுல்ட்டன் என்ற அறிவு நூல் துறையாளர் சென்று (அன்று உலகில் ஏற்பட்டிராத) இயங்கு கோட்டை செய்து தருவதாகக் கூறினாராம். நெப்போலியன் தன் படைத் துறை முனைப்பறிவு காரணமாகத் தருக்கினால், அதை அசட்டை செய்தான். அதுபோலவே பெஸ்ட்டலாஸிதன் அரிய கல்வித் துறைச் சீர்திருத்தக் கருத்துக்களை அவனிடம் கூறிய போதும், அவன் செவி சாய்க்கவில்லை. தன் துறையில் தான் ஒப்பற்ற முதல் அறிஞனாயும், முனைப்பறிஞனாயு மிருந்தும், பிற துறைகளைப் புறக்கணித்ததால் கடற்படைச் சிறப்புடைய பிரிட்டனிடம் அவன் தோல்வியுற்றான். கல்வித் துறையிலும் பிற நாடுகள் ஃபிரான்சைத்