பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

7

தாகிவிடக் கூடும். சமதர்ம வாழ்க்கைத் கோட்பாட்டின்படி முடிந்த முடிவான தத்துவம் யாதெனில் “ஒவ்வொருவரிட மிருந்தும் அவரவர் திறத்துக்கேற்ப உழைப்புப் பெறுக. ஆனால் ஒவ்வொரு வருக்கும் அவரவர் தேவைக்கு வேண்டிய நலன்கள் தருக”என்பதே.

வினா (4) : "ஒவ்வொருவருக்கும் அவரவர் திறத்துக் கேற்றபடி, ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கு வேண்டியபடி” என்று கூறுவதன் பொருள் என்ன?

விடை : முதலாளித்துவத்தின் கீழ் ஒரு திறமையுள்ள அல்லது படித்த ஆளுக்கு திறமையற்றவரை விட உயர்ந்த ஊதியம் கொடுக்கப் படுகிறது. ஆனால் அவன் தலைவனாகிய தொழில் முதலாளி ஆதாய உருவில் பெறும் தொகையை நோக்க அது ஒன்றும் அத்தனை உயர்வுடையதாக இராது. தவிரவும் திறமையுள்ள அல்லது படித்த ஆளுக்கு எப்போதுமே உயர் ஊதியம் கொடுக்கப்படும் என்பதில்லை.அவ்வூதியம் பெரும்பாலும் பொது வாழ்வுக் களத்தில் அவ்விடத்திற்கு வேறு எத்தனை திறமையுள்ள அல்லது படித்த ஆட்கள் கிடைப்பர் என்பதையே பொறுத்தது. ஏனெனில் அவ்வுயர்பணிகளின் தொகை குறிப்பிட்ட அளவிலேயே இருக்கக் கூடுமாதலால் அதனை நாடுபவர்கள் ஒருவரோ டொருவர் போட்டியிடுவர். இது தவிர, தனி உறவுமுறைச் சலுகை வேறு ஏற்படும். அம்முறையில் முதலாளி வகுப்பினரின் உறவினரும் நண்பருமாயுள்ளவர்கள் திறமை குறைந்தவராயிருந்தும், சில சமயம் திறமையே அற்றவரா யிருந்தும், அத்தகைய செல்வாக்கு அற்றவரான திறமையுடைய வர்களுக்கு மேற்பட்ட சலுகை பெறுவர். அடிக்கடி திறமையும் படிப்பும் உள்ள ஆட்களே வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு மிகுதி ஆளாகின்றனர்.

இதற்குக் காரணம் காண்பது எளிது. முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தியை வரையறுப்பது முதலாளியேயாகும். எந்த உற்பத்தியால் தனக்கு ஆதாயம் ஏற்படக் கூடுமோ அதைத்தான் அவன் நாடுவானேயல்லாமல், அதனால் மொத்தத்தில் சமூகத்துக்கு ஆதாயமோ அதனை அவன் நாடமாட்டான். அடிக்கடி சமூகத்தின் நலனுக்கு உற்பத்தி மிகவும் இன்றியமை யாது தேவைப்படும்போது கூட, அவன் தன் சொந்த