பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தலைவர்கட்கு

(227

யென்பதற்காக நீ நேர்மையைக் கைவிடவும் கூடாது.நேர்மையைக் காக்கும் பணியில் உன்னவரையோ பிறரையோ புண்படுத்த நேர்ந்தால், அதனைச் செய்யும் உரமும் துணிவும் உனக்கு வேண்டும்.

கட்சியின் குறிக்கோளுக்காக நாட்டின் குறிக்கோளைக் கைவிடப்படாது. அதுபோலவே நாட்டின் குறிக்கோளுக்காக உலகின் குறிக்கோளை, மனித இனத்தின் குறிக்கோளை, அதற்கும் அப்பாற்பட்ட தெய்விகக் குறிக்கோளை விட்டுவிடக் கூடாது. தெய்விகக் குறிக்கோள் என்பது யாது? வகுப்பு, நாடு, இனம் முதலிய இடப்பரப்பு, மக்கட்பரப்பு யாவற்றையும் கடந்து, முற்காலம், இக்காலம், வருங்காலம் என்ற காலச் சூழ்நிலைக்குரிய தற்காலிகப் பண்புகளையும் கடந்து, எங்கும் எக்காலத்துக்கும் உரிய அடிப்படைக் குறிக்கோளாக அறிஞரால் வகுக்கப்பட்டு, ஆழ்ந்து நுணுகிய ஆராய்ச்சியால் காணவும் வளர்க்கவும் படும் குறிக்கோளே தெய்வீகக் குறிக்கோளாகும். தொலைநோக்கும் பரந்தநோக்கும் உடையவன், தன் பகுத்தறிவையும் மனச்சான்றையும் ஆராய்ச்சித் திறனையும் பயன்படுத்தி இக் குறிக்கோளை அணுகலாகும்.

உன் திறம் வளர வேண்டுமானால், அறிவு வளர வேண்டும். அறிவு வளர வேண்டுமானால், நீ அறிய வேண்டும் செய்திகள் உலகத்திலுள்ள பொருள்கள் யாவுமே, வளர்ச்சி யுடையன என்பதை உணர்தல் இன்றியமையாதது. வளர்ச்சி யுடைய பொருள்களை வரலாற்றுணர்ச்சி யுடனேயே உள்ள வாறறிய முடியும். வளரும் பொருள்களை அறியும் அறிவும் நிலையாயிருக்க முடியாது; வளர்ந்து கொண்டேதானிருக்க முடியும். ஆகவேதான் அறிவுக்கு ஓர் எல்லையோ, உருவோ, முடிவோ செய்துவிடக்கூடாது; கருத்துக்களுக்கும் அப்படியே. மாற முடியா தென்றிருக்கும் கருத்துக்கள், கருத்துக்களல்ல; பிடிவாதங்கள், கோட்பாடுகளல்ல; தன்னலக் குழு வாதங்கள், நம்பிக்கைகளல்ல; மூட நம்பிக்கைகள், வழக்கங்களல்ல; குருட்டுப் பழக்கங்கள், இவற்றை விலக்க விரும்புபவன் அறிவை நிலையான அறிவாக, பொது அறிவாக, விட்டு வைக்கக் கூடாது. புத்தறிவாக, மெய்யறிவாக, பகுத்தறிவாகிய அரத்தினுதவியால் தீட்டிக்