பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

ஆதாயத்துக்கு வழியில்லை

அப்பாத்துரையம் - 46

என்ற காரணத்தால் அவ்

உற்பத்தியையே புறக்கணிப்பதும் உண்டு. உற்பத்தி அவன் ஆட்சியிலிருப்பது காரணமாகத் தொழிலுழைப்பும் அவன் கையிலேயே இருக்க நேரிடுகிறது ; அதாவது திறமையுள்ளவர் திறமையற்றவர் என்ற இருதிறத் தொழிலாளர் களையும் தொழிலில் அமர்த்தும் உரிமையும் தொழிலிலமர்த்தாதிருக்கும் உரிமையும் அவனிடமே இருக்கின்றன. இங்ஙனம் முதலாளித்துவ சமூக முறையில் திறமையும் கல்வியும் இருப்பது கூட உயர் ள தியத்துக்கோ,பணியமர் வுக்கோ உத்தரவாத மளிப்பவையல்ல.

சமதர்ம முறையின் நிலை இதற்கு முற்றிலும் மாறுபட்டது. இங்கே பொதுவாகச் சமூகத்திற்கு எது நன்மை எது இன்றியமையாதது என்ப வற்றைக் கொண்டே உற்பத்தியளவு வரையறுக்கப் பெறுகிறது. அளவு கோல் இதுவாயிருப்பதனால், குறிக்கோள் எப்போதும் மேன்மேலும் உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டிருப்பதேயாகும். எனவே திறமை யுள்ளவர், படித்தவர் உட்பட எல்லார்க்கும் எப்போதும் தொழில் இருக்கவே செய்யும். ஏனெனில் அவர்கள் உழைப்புக்கான தேவை என்றும் எல்லையற்றதாகவே அமையும்.

சமதர்மம் ஒரு கனவு அல்ல. ஆதலால், இப்புதிய அமைப்பு திடுமென ஒரே நாளில் வந்துவிடும் என்று நான் நம்பவில்லை. அது படிப்படியாகவே வர முடியும் - அப் படிமுறைகள் ஒன்றிரண்டு தலைமுறையோ அல்லது அதற்கு மேலோ பிடிக்கலாம்.

சமதர்மத்தின் தொடக்கப் படிகளில் ஒவ்வொருவருக்கும் அவரவர் திறமைக்குரிய உரிமைப்படி ஊதியம் தரப்படும். எடுத்துக்காட்டாக ஒரு மருத்துவமனையின் துணையாளைவிடத் திறமையுள்ள விஞ்ஞானிக்கு உயர்ந்த ஊதியமே கிடைக்கும்.

னெனில் திறமையுள்ள விஞ்ஞானியினால் மனிதசமூகம் முழுவதுமே பயனடையும். சில வாடிக்கைக்காரருக்கு மட்டுமே உதவும் துணையாளரின் உழைப்பைவிட இது எவ்வளவோ மிகுதியானது.

ஆனால் உற்பத்தி ஓர் உயர்ந்த எல்லைக்கோட்டை எட்டியபின், ஒவ்வொருவர் தேவையையும் நிறைவுப்படுத்தப் போதுமான அளவு ஏராளமான பொருள்களைச் சமூகம்