பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

9

அவர்கட்கு வழங்க முடியும். அச்சமயம் யாருமே மிகுதி நலன்கள் கோரமாட்டார்கள். இந்நிலை இன்று ஒரு கனவுலகக் காட்சியாகத் தோற்றக் கூடுமாயினும், இது நடைபெறக் கூடாத நிலைமையல்ல. அந்நிலை வந்தெய்தினால் ஒருவன் ஊதியம் எவ்வாறு வரையறுக்கப்படும்? அவனுக்குத் தேவைப்படுவ தெல்லாம் அவனுக்குத் தரப்படுவது ஒன்றுதானே வழி! அவன் பெருங்குடும்பத்தை உடையவனாயிருந்தால், அவனுக்குக் கூடுதல் கிடைக்கலாம். நோயாளிக்குச் சற்று மிகுதிப்படியான சேவை செய்யப்படும். ஒரு எழுத்தாளர் அல்லது அமைப்பாளர் (எஞ்சீனியர்)க்கு அமைதியும் சந்தடியின்மையும் தேவைப் படுவதை முன்னிட்டு ஒரு தனிமாளிகை அளிக்கப்படக் கூடும்.

"ஒவ்வொருவருக்கும் அவரவர் திறமைக்குத் தக்கபடி; ஒவ்வொரு வரும் அவரவர் தேவைக்கு வேண்டியபடி' என்பதன் பொருள் இதுவே.

இன்றைய சமூகத்திலுள்ள வகுப்புக்கள் அவ்வவ்வகுப்பினரின் அறிவு நிலை உயர்வு தாழ்வின் அடிப்படையில்தான் அமைந்துள்ளன என்று கூறமுடியாது. அவை பெரும்பாலும் அவர்கள் செல்வமுடைமை, செல்வமில்லாமை அடிப்படை யாகவே அமைந்துள்ளன. ஊதியப் பங்குமூலமோ, ஆதாய மூலமோ, பொறுப்பாளர் ஊதியமாகவோ முதலாளிக்குக் கிடைக்கிற ஊ ஊதிய உயர்வு அவர் வேலைக் கமர்த்தும் ஊழியர்களைவிட அவர் மிகுதி அறிவுடையவர் என்பதற்காக அன்று - உண்மையில் தமக்குப் பகரம் ஆராய்வதற்கும் திட்ட மமைப்பதற்குமாக அவர்கள் அமர்த்தும் நிர்வாகிகள், பொறியமைப்பாளர்கள் ஆகியவர்கள் அவர்களைவிட அறிவுத்திறமிக்கவர்களே. எனவே, தொழில் துறையில் தாம் பணத்தை முதலிட்டிருப்பதன் காரணமாகவே அதாவது உற்பத்திக்கான கருவிகள் அவருக்கு உரியவை என்பதற்காகவே அவர்கள் அவ்வுயர்வு பெற்றுள்ளனர் என்பது உறுதி.

-

வினா (5) : அவர் பணத்தை முதலிட்டிருக்கிறார் ; இம்முதலீட்டுப் பணம் அவர் மீத்துவைத்துள்ள பணமாயிருக்கலா மல்லவா?

விடை : மீத்துவைத்த பணமாயிருக்கவும் கூடும். ஆனால் அப்படி எப்போதும் இருப்பதில்லை. அப்படியில்லாமலிருப்பதே நடைமுறையில் பெரும்பாலாகக் காணப்படுகிறது. மிகமிகப்