பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

அப்பாத்துரையம் - 46

பெரும்பான்மையாக, அவர் முதலீடு அவரே ஈட்டிய பொருளாயிருப்பதில்லை. பரம்பரைச் சொத்தாகவோ வேறு நேர்மையற்ற முறையில் வந்ததாகவோதான் இருக்கும். உழைப்பாளி, அவன் இயந்திர உழைப்பாளியாயிருந்தாலும் சரி, தொழில்துறை ஊழியனா யிருந்தாலும் சரி, முதலாளியுடன் நெடுந்தொலைவிலிருந்து போட்டியிடும் அளவுகூடத் தன் வாழ்நாளில் ஈட்ட முடியாது.எனவே முதலாளிக்கு அவனது மற்ற தோழர்களைவிட நேர்மையற்ற நலமேம்பாடு ஏற்பட்டுள்ளது.

வினா (6): முதலாளிகளை ஒவ்வொருவராகச் சீர்திருத்தஞ் செய்து மாற்றி அதன்மூலம் அவர்கள் தொகையைக் குறைத்தா லென்ன?

இசை

விடை : சமதர்மத்தைத் தனிப்பட்ட முதலாளியிடம் பழிவாங்கும் எண்ணமுடைய முறை என்று கொள்வது சமதர்மத்தினைத் திரித்துக் காட்டும் கேலிச் சித்திரமாயமையும். அது முதலாளித்துவத்தை அதாவது முதலாளிகளின் வகுப்பையே எதிர்த்துப் போராடும் ஒரு புனிதப் போராட்ட மாகும். அதுவும் ஒரு நாட்டிலன்று, உலக முழுவதிலுமுள்ள முதலாளி வகுப்பையே எதிர்க்கும் போராட்டமாகும். இப் போராட்டமும் போதிய, பகுத்தறிவுக்கொத்த காரணத் துடனேயே யாகும். இன்று நமக்குத் தேவைப்படுவதெல்லாம்- உணவு, உடை, வீடு, மின்சாரம், தொடர் ஊர்திகள், கப்பல்கள், யாவும் அவர்களால் உற்பத்தி செய்யப் படுபவையே. உலகில் முதலாளிகள் இன்று விரும்பினால், மனித வகுப்பு முழுவதையும் பட்டினியிடவோ, வேறு வகையில் ஓட்டாண்டி யாக்கவோ செய்யலாம். இது அவர்களால் செய்ய முடியாத காரியமன்று. இன்றைய சமூக அமைப்பில் உற்பத்தியின் சாதனங்களை உடைய அவர்கள் கதவடைப்புக் காலங்களில் சிலசமயம் செய்வதுபோல், உற்பத்தி முழுவதையுமே நிறுத்தி வைக்க முடியும். இதனால்தான் உற்பத்திச் சாதனங்கள் முதலாளிகள் என்ற தனியாட்கள் உடைமையாக இருக்கக் கூடாதென்றும் பொதுவுடைமையாக வேண்டுமென்றும் சமதர்மம் வற்புறுத்திக் கோருகிறது. உற்பத்திச் சாதனங்கள் சமூகப் பொது உடைமையானால், அந்தக் கணமே சமூகத்திலிருந்துவரும் வகுப்புப் பிரிவினை தானாக மறைந்து விடும். வகுப்பு வேறுபாடற்ற சமூகமும் ஏற்பட்டுவிடும். வகுப்புகள் ஒழிக்கப்படுவது இங்ஙனம் சமூக நலனுக்கான ஒரு இன்றியமையாதச் செயலாகும்.