பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

11

வினா (7) : முதலாளி வகுப்பு மனித இனத்துக்கு எந்த வகையில் தீங்கு செய்கிறது?

விடை : முதலாளித்துவ அமைப்பு பசி, போர், வறுமை முதலிய எத்தனையோ தீங்குகளுக்குப் பிறப்பிடமாக உள்ளது. இங்கும் நம் முதலாளித்துவத் தோழர் எவரும் செய்யும் செயலையோ செய்யாது விடும் செயலையோ வைத்துக் கொண்டு முதலாளித்துவத்தை மதிப்பிடக் கூடாது. ஏனெனில் சமதர்மம் தனிப்பட்டஆட்கள் எவரைப்பற்றியும் எதுவும் குறிப்பிடவில்லை. மொத்தத்தில் சமூகமும், வகுப்பும் ஆகியவற்றைப் பற்றி மட்டுமே குறிக்கின்றது.

வினா (8) : இதில் முதலாளித்துவம் தவறு செய்வது எங்கே?

விடை : அது செல்வத்தை ஓரிடத்தில் குவிய வைக்கிறது. அதாவது உலகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் அத்தனையையும் அது ஒரு சிலர் கையில் சிக்க வைக்கிறது. ஒரு முதலாளி பலதரப்பட்ட தொழிலாளர்களாக 2000 பேர்களைத் தொழிலில் ஈடுபடுத்துகிறான் என்று வைத்துக் கொள்வோம். தொழிலுற்பத்திப் பொருள்களைப் பரக்க வழங்குவதில் இதன் மூலம் சுற்றுவகையில் ஈடுபடுபவர் பல்லாயிரம் பேர் இருக்கக் கூடும். இத்தனை பேர்களின் உழைப்பு மதிப்புக்கும், பண மதிப்பு மாற்று ஆக அவன் ஒரு திட்டமிடுகிறான் - இதுவே கூலி என்பது. தொழிலுக்குத் தொழில், இடத்துக் கிடம், கூலித்தரம் வேறுபடுகிறதாயினும் அவற்றின் பொழுதுப்போக்கு ஒன்றுதான். அது யாதெனில் உழைப்பாளிக்கு முதலாளி தருவது அவன் உணவு, உடை, பீடிச் செலவு, வீட்டு வாடகை முதலிய அவசியத் தேவை களுக்குரிய பணமே. முதலாளி கொடுப்பது தொழிலாளி உற்பத்தி செய்வதற்கு என்றும் சரிசமமாயிராது; குறைவாகவே இருக்கும். அது அவன் சாகாமல் பிழைத்திருக்கவும் வேலை செய்யத்தக்க மனநிலையிலும் உடல் நிலையிலும் இருக்கவும் மட்டுமே உதவும். தொழிலாளியின் மீந்த உற்பத்தி மதிப்பு அல்லது மிகுதிப்படி மதிப்பு அதாவது அவன் கூலியுருவில் பெறும் பண மதிப்புக்கு மேற்பட்டு அவன் உழைத்து உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பு முழுவதும் முதலாளியின் பொருளாய்விடுகிறது. மேற்குறிப்பிட்ட தொழிற்சாலை வகையில் அதன் 2,000 தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் மிகுதி மதிப்புச்